”கண்டிப்பா செய்றேன் அப்புறம் உன்கிட்ட ஒரு விசயம் சொல்லனும்”
”சொல்லுங்க”
”இல்லை நீ என்னை அவாய்டு பண்றியா”
”சே சே என்ன பேச்சு இது“
”அப்படியில்லை ஹனிமூன்க்கு கூட்டிட்டுப் போன ஆனா, அங்க கோயில் வேண்டுதல்னு அலைய வைச்ச, கடைசியா இப்படி மாலை போட்டுக்கிட்டு வந்து நிக்கற உன் மனசுல என்னதான் இருக்கு”
”என் மனசுல இப்ப அந்த ஓம்சக்திதான் இருக்கா“
”நான் அதைக் கேட்கலை என்கூட வாழ உனக்கு விருப்பம் இல்லையா”
”இதை பத்தி நான் தெளிவா கல்யாணத்துக்கு முன்னாடியே பேசிட்டேனே, மறுபடியும் சந்தேகத்தோட கேட்டா என்ன அர்த்தம்”
”இளங்கோவை மறக்க முடியலையா உன்னால, அதனாலதான் என்கூட ஹனிமூன் கொண்டாட கஷ்டப்பட்டு இப்படி மாலை போட்டிருக்கியா”
”ஆமாம்” என்றாள் பட்டென
”என்ன இப்படி பட்டுன்னு சொல்லிட்ட, அப்போ நாம கணவன் மனைவியா வாழறது எப்போ”
”உங்க மனசுல இருந்து பவானியோட நினைப்பு மறையறவரைக்கும், என் மனசுல இருந்து இளங்கோவோட நினைப்பு மறையறவரைக்கும்” என சொல்ல அவனோ அதிர்ந்து
”என்னது பவானியா, அவ எங்கிருந்து வந்தா”