வேலையில ப்ரமோஷன் வரும் சம்பளம் உயரும்னு நினைச்சேன் ஆனா, அவன் அப்படி எதுவும் செய்யலை, என்னை யூஸ் பண்ணிக்கவே பார்த்திருக்கான்னு இப்பதான் எனக்குப் புரியுது”
”நீ மட்டும்தானா இல்லை இன்னும் வேற யாராவது இருக்காங்களா”
”இருக்காங்க“
”அவங்க ஏன் என்கிட்ட வந்து புகார் சொல்லலை“
”எப்படி சொல்வாங்க, நீங்க அவரோட மனைவியாச்சே”
”தப்பு நான் இந்த ஆபிஸ்ல வேலை செய்றேன், இந்த கணவன் மனைவி உறவு எல்லாம் ஆபிசுக்கு வெளியதான், எனிவே இப்பவாவது வந்து விசயத்தை சொன்னியே சந்தோஷம் இனி தருணை நான் பார்த்துக்கிறேன் நீ போ”
”என்னை காட்டிக்கொடுத்துடாதீங்க”
”ஆமா இதுல எல்லாம் தெளிவா இருங்க, மிச்சத்தில கோட்டை விட்டுடுங்க சரி சரி நீ போ ஆமா எந்த ஓட்டலுக்கு வரச் சொன்னான்” என கேட்க அந்த பெண்ணும் சொல்ல அவளை அனுப்பிவிட்டு ஹரிணியே தருணை தேடி அந்த ஓட்டலுக்குச் சென்றாள், அவன் சொன்ன அறை முன் நின்று கதவை தட்ட சில நொடிகளில் கதவு திறக்கப்பட்டது
”ஹாய் பிரியா” என சொல்லிக் கொண்டே தருண் வர ஹரிணியோ அவனை கொலைவெறியுடன் பார்த்தாள், அவளை அவ்விடம் எதிர்பார்க்காத தருணோ
”ஹரிணி”
”ம்ம்” என உருமினாள்
”சக்தி சாரி”