”சக்தி”
”சரிடி என்ன இதெல்லாம் எதுக்கு இப்ப என்னை வேலையை விட்டு எடுத்தேன்னு மெயில் அனுப்பியிருக்க அப்படி நான் என்ன தப்பு செய்தேன்“
”ஓ அதுக்குள்ள மறந்தாச்சா வேலையில ப்ரமோஷன் வாங்கித்தரேன், சம்பளம் அதிகப்படுத்தறேன்னு பொய் சொல்லி பொண்ணுங்ககிட்ட தப்பா நடந்துக்க பார்த்தீங்கள்ல அதுக்குதான் உங்களை வேலையை விட்டு எடுத்துட்டேன், இந்த கம்பெனின்னு இல்லை இனி எந்த கம்பெனியிலயும் உங்களுக்கு வேலை கிடையாது, அந்தளவுக்கு உங்க மேல ப்ளாக்மார்க் போட்டு வைச்சிட்டேன்”
”இது அநியாயம் நான் உன் கணவன்“
”அதெல்லாம் வீட்டுலதான், ஆபிஸ்ல நான்தான் ஜெஎம்டி”
”ஓ அதிகார திமிரை காட்டறியா“
”இல்லை தப்பு செய்த உங்களை தண்டிச்சிருக்கேன்”
”எனக்கு ஒரு வாய்ப்பு கொடு“
”எதுக்கு மறுபடியும் ஓட்டல் ரூமுக்கு யாரையாவது கூப்பிடறதுக்கா“
”என்னை என்னதான் செய்ய சொல்ற, நான் ரொம்ப காஞ்சி போயிருக்கேன் புரியுதா உனக்கு, மனைவியா நீ எனக்கு தராத இன்பத்துக்கு நான் என்ன செய்வேன் வெளியதான் தேடனும்”
”ஓ லாஜிக்கா பேசறீங்களா சரி இன்பத்துக்காகதானே போனீங்க, அதுக்கு ஏன் ஆபிஸ்ல இருக்கற பொண்ணுங்களை ஏமாத்தி வரவழைக்கனும், அதுக்குன்னு இருக்கற பொண்ணுங்ககிட்ட போக வேண்டியதுதானே”