(Reading time: 18 - 35 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

  

”நேத்து ராத்திரி நீங்க பவானின்னு அலறிக்கிட்டு இருந்தீங்க, நானே பயந்துப் போய் உங்களைப் பார்க்க வந்தேன், பவானி பவானின்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்க, உங்களை எழுப்பினா அப்பவும் பவானின்னே சொன்னீங்க அதுக்கு மேல என்ன செய்றதுன்னு தெரியாம பேசாம வந்துட்டேன்“

  

”ஓ அதுவா அது ஒரு கெட்ட கனவு”

  

”பவானி உங்க மனசுல இருக்கா, சதா அவளையே நீங்க நினைச்சிக்கிட்டு இருக்கறதாலதானே கனவுலயும் அவளே வர்றா“

  

”சே சே அப்படியில்லை அது வந்து”

  

”சமாளிக்காதீங்க, ஆபிசுக்கு நேரமாகுது வாங்க போலாம்” என அவள் கடுமையாக சொல்லிவிட்டு தனது காரில் சென்றுவிட, அவனுக்கு வாழ்க்கையே கசந்துவிட்டது. வேண்டா வெறுப்பாக தனது பைக்கில் ஆபிசுக்குச் சென்றான்.

  

ஆரம்பத்தில் வேலையை விட்டு நின்றுவிடலாம் என நினைத்த அவனே இப்போது ஹெச் ஆர் வேலை கிடைக்கவும் மகிழ்வுடன் வேலையில் இறங்கினான். ஹரிணி இவ்வாறு மாலை போட்டது அந்த ஆபிஸ் முழுக்க பரவிவிட்டது, அவரவர்கள் தருணை வைத்து கலாய்த்தார்கள் அவனை கஷ்டப்படுத்தினார்கள்

  

”என்னப்பா தருண் ஹனிமூன் எப்படியிருந்தது” என நக்கலாக கேட்டார்கள் சிலர்

  

”ஹனிமூன்ல என்னப்பா செய்த, மேடம் மாலை போடற அளவுக்கு அவங்களை பயமுறுத்திட்டியா” என கிண்டல் செய்தார்கள், அவர்களின் கேலி கிண்டலை தாங்கிக் கொள்ள முடியாமல் பாத்ரூம் சென்று கண்ணாடியில் தன்னைப் பார்த்தபடி கண்ணீர் விட்டான். அந்த கண்ணீரில் அவனுக்கு ஏனோ பவானியின் நினைவு வந்தது

  

”சே நாம மாலை போட்டப்ப கூட ஆபிஸ்ல இருக்கறவங்க பவானிகிட்ட இப்படிதானே

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.