கூப்பிடனும், ஏற்கனவே மேடம்னு கூப்பிடுவேன் தலைமேல நின்னு ஆடுவா இப்ப சக்தின்னு கூப்பிட்டதும் என் உசுரை வாங்கறா, பாவி படுபாவி எப்படித்தான் இவளோட குடும்பம் நடத்தறதோ சே அவசரப்பட்டு இவளை கல்யாணம் செய்துக்கிட்டோமா இல்லை இல்லை இவளை கல்யாணம் செய்ததால சில நஷ்டம் வந்தாலும், சில லாபங்களும் வந்திருக்கே நாம ஹெச் ஆர் ஆகியிருக்கோம், அவளோட டெபிட் கார்டு இன்னும் நம்மகிட்டதானே இருக்கு போதாக்குறைக்கு அவளோட ப்ளாட்ல சகல வசதிகளோட நாம வாழறோம், இது போதாதா என்ன இருந்தாலும் கணவன் மனைவியா வாழ வழியில்லாம போச்சே, சரி அவள் எங்க போயிடுவா மாலை கழட்டின பின்னாடி மனைவியா அவள் வாழ நம்மகிட்ட வரலைன்னா நாமளே அவள்கிட்ட போக வேண்டியதுதான், நமக்குதான் உரிமையிருக்கே, அந்த உரிமையை வைச்சி அவளை அடைஞ்சிடனும்” என வில்லங்கமாக நினைத்தபடியே தன் வேலையில் மூழ்கினான்.
ஒரே வாரத்திற்குள் அவனும் தனது வேலைகளை சரிவர செய்து ஹரிணியிடம் நல்ல பெயர் எடுத்தான். அவனுக்கு ஆபிஸில் வானளவு மரியாதை தந்தார்கள், அதற்கு காரணம் அவன் ஹெச்ஆர் அடுத்தது அவன் ஹரிணி அதுவும் ஜெஎம்டி ஹரிணியின் கணவன் அவனை பகைத்துக்கொள்ள கூடாது, அவனுக்கு வேண்டியதை செய்தால் தங்களுக்கு நல்லது நடக்கும் என ஒரு கூட்டமே அவனை மொய்த்தது, அதில் பெண்களும் உண்டு, ஆண்களிடம் பணத்தை கரந்தவன் பெண்களிடம் ஆபாசமாக பேசி அவர்களை தன் வலையில் சிக்க வைத்தான் தருண்.
அவனிடம் மாட்டிக் கொண்ட பெண்கள், தங்கள் தவறை உணர்ந்தும் அவனிடம் இருந்து தப்பிக்க வழியின்றி தவித்தார்கள் அவனோ ஹரிணி ஒரு புறம் இருக்கட்டும் என தன்னிடம் தானாக வந்த பெண்களிடம் தகாத உறவு கொள்ள முடிவு செய்தான். இவ்வளவு தூரம் இவன் செல்லக்கூடும் என ஹரிணியே எதிர்பார்க்கவில்லை. துணிந்து ஒரு பெண் அவளிடம் புகார் தந்த பிறகுதான் அவள் அதிர்ந்தாள்
”இன்னிக்கு நைட் 7 மணிக்கு ஓட்டல் ரூமுக்கு வரச் சொல்லியிருக்காரு, எனக்கு என்ன செய்றதுன்னு தெரியலை, என்னை காப்பாத்துங்க” என அழ அவளோ
”ஆரம்பத்திலேயே அவன்கிட்டயிருந்து நீ விலகியிருக்கனும் எதுக்காக அவன்கிட்ட போன”
”சாரி என் மேலதான் தப்பு, அவனால எனக்கு நல்லது நடக்கும்னு நினைச்சேன், எனக்கும்