”சே நீயெல்லாம் ஒரு மனுஷனா”
”இல்லை நான் இல்லை, பிரியாதான் என்னை இங்க வரச் சொன்னா”
”போதும் உன்னைப் போய் நல்லவன்னு நினைச்சி, நான் பெரிய தப்பு செய்துட்டேன்“
”இல்லை இல்லை அப்படியில்லை, நானா எதுவும் செய்யலை, அவள்தான் என்னைத் தேடி வந்தா“
”வந்தா அதுக்குன்னு ஓட்டல் ரூம் வரைக்கும் கூப்பிடுவிங்களா”
”சே சே இல்லை நான் தப்பான எண்ணத்தோட அவளை கூப்பிடலை, வேலை விசயமா அவளை பார்த்து பேசி”
”ஓட்டல் ரூம்ல வேலை செய்யப் போறீங்களா, என் மானமே போச்சி கிளம்புங்க வீட்டுக்கு போகலாம்” என அழைக்க அவனோ
”யார் இதைச் சொன்னது அந்த பிரியாதானே“
”இப்ப அதை தெரிஞ்சிக்கறதுதான் முக்கியமா வர்றீங்களா இல்லை இங்கயே இருக்கீங்களா” என கத்த அதில் தருண் அரண்டுப் போய் அவளுடன் வீடு திரும்பினான். வீடு வந்தும் அவளின் கோபம் தணியவில்லை. தருணுக்கும் தான் வசமாக மாட்டிக் கொண்டோமே என எண்ணி பயந்து அவளிடம் செல்லாமல் தன் அறையில் சென்று முடங்கினான்.
மறுநாள் அவனது செல்போனில் ஒரு மெசேஜ் வந்தது, அதை என்னவென பார்த்து அதிர்ந்து அவசரமாக ஹரிணியை தேடிச் சென்றவன் அவளிடம்
”ஹரிணி என்ன இதெல்லாம்“