சொல்லுங்க” என கத்த அவனோ
”சரி சரி செய்றேன், நீ போய் குளிச்சிட்டு வா பிரேக்பாஸ்ட் ரெடியா இருக்கும்” என சொல்லிவிட்டு தருண் சமையல் செய்யச் செல்ல ஹரிணியோ இளப்பமாக சிரித்தபடியே குளித்து முடித்து ரெடியாகி வந்தாள். அவளுக்காக இல்லாவிடினும் அவனுக்காகவாவது அவன் சமைத்து வைத்திருந்தான். அதை இருவரும் சாப்பிட்டு முடித்ததும் அவனிடம்
”நான் நாளைக்கு மேல் மருவத்தூர் போறேன்”
”ஓ மாலையை கழட்டப்போறியா”
”ஆமாம் நீங்களும் வர்றீங்களா“
”இல்லை நான் வரலை”
”அப்ப சரி நான் ஈவ்னிங் வரலை, ஷாப்பிங் முடிச்சிட்டு லேட்டாதான் வருவேன்“
”நோ ப்ராப்ளம்” என சொல்ல அவள் வேலைக்குச் சென்றாள். தருணோ ஹாயாக டிவி பார்த்தபடி சோபாவில் ஓய்வெடுத்தான்
மறுநாள் ஹரிணி கோயிலுக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்ய தருணோ
”ஏதோ ஒரு மண்டலம் இருக்கப் போறதா சொன்ன, உடனே மாலையை கழட்டற என்ன விசயம்”
”பெண்களுக்குன்னு சில விசயங்கள் இருக்கு, அதை சொன்னா புரியாது உங்களுக்கு“
”எல்லாம் எனக்குத் தெரியும் ப்ரீயட்ஸ்தானே, இதை எப்பவோ நான் எதிர்பார்த்ததுதான்“
”உங்ககிட்ட பேச எனக்கு நேரமில்லை, நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு அவள் கோயிலுக்குச் சென்றாள் இரண்டு நாள் கழித்து வீடு திரும்பினாள். வீடே அழுக்காக கந்தல்