”அப்புறம் என்ன ஏற்பாடு செய்யவா”
”தாராளமா செய்ங்க ஆனா அதை 3 நாள் கழிச்சி செய்ங்க”
”சே அதுக்குள்ளயா”
”ஆமாம்”
”இப்பதான் வரனுமா உனக்கு”
”ஹலோ, இதெல்லாம் இயற்கை, ரொம்ப கத்தாதீங்க, 3 நாள்தானே பொறுத்துக்க மாட்டீங்களா, நான் வேற 2 நாள் லீவு எடுத்தேன், ஆபிஸ் என்னாச்சின்னு தெரியலை போய் பார்க்கனும், பென்டிங் வேலைகளை முடிக்கனும் எனக்கு நிக்கவே நேரமில்லை தருண் ப்ளீஸ் நீங்க வேற என்னை கஷ்டப்படுத்தி பார்க்காதீங்க” என சொல்லிவிட அதில் அடங்கிப் போனான் தருண்
மறுநாள் ஹரிணிக்கு ஆபிசில் ஏகப்பட்ட வேலைகள் அதை முடித்துக் கொண்டு வரவே இரவு 11 ஆகிவிட தருணுக்கு கோபம் அதிகரித்தது
”இவ்ளோ நேரம் ஆபிசுல என்ன வேலை உனக்கு”
”அதான் சொன்னேனே, 2 நாள் லீவு எடுத்ததால எல்லா வேலைகளும் பென்டிங்ல இருந்தது, இருக்கற வேலைகளை முடிச்சிட்டு வர்றதுக்கு இவ்ளோ நேரமாயிடுச்சி சாரி தருண்”
”சரி வா சாப்பிடலாம்”
”சாரி தருண் நான் வெளிய சாப்பிட்டுட்டேன்”
”ஆனா நான் இன்னும் சாப்பிடலையே“