விருப்பத்துக்காகலாம் என்னால வரமுடியாது, அதுக்கு வேற ஆளைப்பாரு” என சட்டென சொல்லிவிட பவானியின் கண்கள் கலங்கிவிட்டது.
”ஏன் இப்படி பேசறீங்க கல்யாணம் ஆகி 4 மாசம் ஆகுது, ஏதோ ஒரு ஆசையில இந்த ஏற்பாடுகளை செய்தேன், உங்களுக்கு பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லியிருக்கலாமே அதை விட்டுட்டு விபச்சாரம் அது இதுன்னு அசிங்கமா பேசறீங்க சே” என்றாள் வெறுப்பாக
”ஓ நான் பேசினதே உனக்கு இவ்ளோ வெறுப்பா இருக்கே, நீ செய்த காரியத்துக்கு நான் எவ்ளோ வெறுப்பா இருப்பேன், ஏதோ என் கோபத்தை குறைச்சிக்கிட்டு பொறுமையா பேசறேன், இல்லைன்னா என்னோட முழு கோபத்தை உன்னால தாங்கிக்கவே முடியாது பவானி, இனிமேல இதுபோல கீழ்த்தரமானவேலைகளை செய்யாம இரு, எனக்கு எப்ப தோணுதோ அப்ப இந்த ஏற்பாடுகளை செய்யலாம்“
”உங்களுக்கு தோணறப்ப எனக்கு தோணாம போனா என்ன செய்றது”
”அதெல்லாம் அப்ப பார்த்துக்கலாம்“
”நீங்க விரும்பி வந்து எனக்கு விருப்பம் இல்லாம போனா இப்ப என்னைப் பார்த்து நீங்க சொன்ன அத்தனை வார்த்தைகளும் உங்களைப் பார்த்து சொல்லவா விபச்சாரம்னு சொல்லவா” என அவள் கோபத்தில் பொங்க தருண் சட்டென அவளின் கன்னத்தில் விட்டான் ஒரு அறை
”பொம்பளையா லட்சணமா இரு, கண்டபடி பேசி வைக்கற சே உன்னை பத்தி நல்லா தெரிஞ்சிக்கிட்டு கல்யாணம் செய்திருக்கனும், அப்பா அம்மா சொன்னாங்களேன்னு உன்னை கட்டிக்கிட்டேன் பாரு, எனக்கு இது தேவைதான், உன்னைப் பார்க்கவே அருவெறுப்பா இருக்கு, போய் தொலை இங்கிருந்து” என விரட்டினான்
”ஒரு புருஷன் கிட்ட மனைவியா அடிப்படை உரிமையை எதிர்பார்க்கறது தப்பா”
”உரிமையை நான்தான் தரனும், நீயா எடுத்துக்க கூடாது கொஞ்ச நாள் போகட்டும் நானே உன்கிட்ட வரேன்“