”சாப்பிட வேண்டியதுதானே, நானா வேணாம்னு சொன்னேன் எனக்கு ஒரே டயர்டா இருக்கு நான் போய் தூங்கறேன்” என சொல்லிவிட்டு அவள் சென்றுவிட தருணுக்கு சாப்பிடும் எண்ணமே பறந்துவிட்டது. அவனும் உண்ணாமல் தன் அறையில் முடங்கினான்
மறுநாளில் இருந்து தொடர்ந்து ஒரு வாரத்திற்கு ஹரிணி தாமதமாகவே வீட்டுக்கு வந்தாள், சில நேரம் தருண் விழித்திருப்பான், சில நேரம் அவன் உறங்கியிருப்பான். இன்று அவள் வீடு வரும் போது தருண் விழித்திருந்தான்
”11 மணிக்கு வந்துக்கிட்டு இருந்த, இப்ப மணி ஒன்றரை, எதுக்கு வந்த அங்கயே தங்கிட வேண்டியதுதானே, இருந்து உன் வேலைகளை முடிச்சிட்டு வரவேண்டியதுதானே இங்க யார் உனக்காக காத்திருக்கா” என கோபத்தில் பொங்க அந்த வார்த்தையை இறுக்கமாக பிடித்துக் கொண்ட ஹரிணி மறுநாளில் இருந்து ஆபிஸிலேயே வேலை முடித்துவிட்டு அங்கேயே உறங்கிப் போனாள். 2 நாட்கள் இவ்வாறு அவள் நடந்துக் கொள்ள தருணே தன் தவறை உணர்ந்து அவளிடம் போனில் கெஞ்சினான்
”சாரி ஹரிணி தப்புதான், என்னை மன்னிச்சிடு, நான் அப்படி சொல்லியிருக்க கூடாது, உன் வேலை அப்படி, ஜெஎம்டியாயிட்ட அதிகமா வேலையிருக்கும், அதைப்பத்தி யோசிக்காம உன்னை நான் திட்டிட்டேன் சாரிம்மா, ப்ளீஸ் வீட்டுக்கு வா” என கெஞ்ச அவளும் மனம் இரங்கி வீடு திரும்பினாள்
”நாளைக்கு லீவு, நான் ரெஸ்ட் எடுக்கப் போறேன்“
”தாராளமா எடுத்துக்க” என தருண் சொல்ல ஹரிணியும் தன் அறையில் உறங்கப் போனாள். மறுநாள் விடுமுறை என்பதால் அவளை வெளியே அழைத்தான்
”வீட்ல இருந்து எனக்கு ஒரு மாதிரி பைத்தியம் பிடிக்கற மாதிரியிருக்கு, உனக்கும் வேலை அது இதுன்னு ஒரு மாதிரியா இருக்க, வாயேன் வெளிய எங்கயாவது போய் வரலாம்” என அழைக்க உடனே ஒப்புக் கொண்டாள் ஹரிணி, அவளை அழைத்துக் கொண்டு பீச் பார்க் ஷாப்பிங் என அலைந்து முடித்து வீடு திரும்பினான் தருண். அவளின் அறையில் ஹரிணி இருக்க அவளை நாடிச் சென்றான் தருண். அவனின் எண்ணம் அறியாமல் இயல்பாக