அவனைப் பார்த்து மென்மையாக புன்னகை செய்ய அதைக்கண்டு தருண் வெறித்தனத்துடன் அவள்மீது பாய்ந்தான், அதில் அவள் அலறி அவனை தள்ளிவிட்டு ஒதுங்கி நின்றாள்
”ஏன் இப்படி இன்டீசன்டா நடந்துக்கறீங்க, சே எனக்கு இது பிடிக்கலை”
”சாரி ஹரிணி நீ சிரிக்கவும் நான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன், வேணும்னே இப்படி செய்யலை உன்மேல எனக்கு இருக்கற உரிமையிலதான் அப்படி நடந்துக்கிட்டேன்“
”உரிமைங்கறது நானா தரனும், நீங்களா எடுத்துக்க கூடாது, எதுக்கும் காலம் நேரம் தேவை அதைவிட என்னோட சம்மதம் தேவைன்னு உங்களுக்குத் தெரியாதா”
”இதுல சம்மதிக்க என்ன இருக்கு, நீ என் மனைவி, நான் உன் கணவன் அப்புறம் என்ன”
”கணவனாவே இருந்தாலும் மனைவியோட அனுமதியில்லாம அவள் நிழலை தொடறது விபசாரத்துக்கு சமம்” என சொல்ல அதில் அவன் அரண்டுப் போனான். அவள் சொன்ன வார்த்தைகள் அவனை தீயாய் சுட்டது, அதைவிட அவ்வார்த்தைகள் எங்கோ கேட்டது போல தோன்றியது, நன்றாக யோசித்துப் பார்க்கையில் பவானியின் நினைவே வந்தது.
பவானியோ தருண் ஐயப்பன் மாலை கழட்டி விட்டு வந்ததும் அறையை அழகாக அலங்காரம் செய்திருந்தாள். அந்த அலங்காரத்தைக் கண்டதும் அவனுக்கு புரிந்துப் போனது உடனே கோபத்துடன்
”உன்னால கன்ட்ரோலா இருக்க முடியாதா, இப்படி அலையற, சே நான் உன் கணவன் நீ என் மனைவி, உனக்கு எல்லா உரிமையும் இருக்கு ஆனாலும் என்னோட விருப்பம்னு ஒண்ணு இருக்கே, அதை நீ மறந்துட்டியா, என்னதான் நீ என் மனைவின்னாலும் என் அனுமதியில்லாம என் நிழலை நீ தீண்டறது கூட எனக்கு எப்படியிருக்கு தெரியுமா ஏதோ விபச்சாரம் போல தெரியுது” என சொல்லிவிட அவளின் ஏக்கம், ஆசை, கனவு அனைத்தும் சுக்கு நூறாக உடைந்துவிட்டது.
”எனக்கும் இதுல விருப்பம் இருக்கனும், அப்பதான் இதெல்லாம் அழகா இருக்கும், உன்