(Reading time: 13 - 26 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

“நான் பார்த்துட்டேன் உங்களையும் பார்த்துட்டேன். ஒரு சின்ன பொண்ணு முன்னாடி இப்படி டவலோட நிக்கறீங்களே இது தப்பில்லையா” என கேட்க  ரிஷியும் தன்னை ஒரு முறை பார்த்துக்கொண்டு தலையில் அடித்துக்கொண்டே அர்ஜூனிடம் பேசலானான்.

   

”குளிச்சேன் அதான் இப்ப என்ன ட்ரஸ் போட்டுக்கறேன் அதுக்கு ஏன் அவளை திட்டற பாரு அவள் அழறா பாரு”

   

“அவளை நான் சமாதானம் பண்ணிக்கிறேன் நீங்க முதல்ல ட்ரஸ் பண்ணுங்க” என சொல்லிவிட்டு நந்தினியை அழைத்துச்செல்ல முனைய தடுத்தான் ரிஷி

   

”அவளை எங்க கூட்டிட்டு போற”

   

“உங்களுக்கு எதுக்கு” என அவனை தள்ளிவிட்டு வெளியே சென்றான் அர்ஜூன் அவன் சென்றதும் அவசரமாக ரெடியாகி வெளியே வர அதற்குள் அர்ஜூன் அவளை அழைத்துச் சென்றிருந்தான்.

   

ரிஷியும் வேகமாக காரை ஓட்டிக்கொண்டு ஓரிடத்தில் அர்ஜூன் காரை பார்த்து விட்டான். வண்டியை நிறுத்த சொன்னால் அர்ஜூன் நிறுத்த மாட்டான் என உணர்ந்த ரிஷி தன் காரை அவனைவிட முன்னோக்கி வேகமாக ஓட்டிச்சென்றான். ஓரிடத்தில் ரோடுக்கு குறுக்கே காரை நிறுத்திவிட்டு காரை விட்டு இறங்கி நின்றுக்கொண்டிருந்தான் ரிஷி. அந்நேரம் அங்கு வந்து அதைப்பார்த்த அர்ஜூன் தன் தலையில் அடித்துக்கொண்டு வேறுவழியிருக்கறதா என பார்க்க எதுவும் இல்லாமல் போகவே ரிஷியிடமே சென்று காரை நிறுத்திவிட்டு இறங்கியவன் நேராக அவனிடம் சென்றான்.

   

”அண்ணா என்ன செய்றீங்க” என கோபமாக கேட்க அதற்கு ரிஷி

   

“நான் எதுவும் செய்யலை நீயே பாரு டயர் பஞ்சர்” என சொல்லவும் 

   

”நான் நம்பமாட்டேன்”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.