(Reading time: 13 - 26 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

”அதான் கூட்டிட்டு வந்து விட்டுட்டேனே அப்புறம் என்ன”

   

”ஒரு பொண்ணுகிட்ட நல்லவிதமா பழக தெரியாதா அண்ணா நான் என்ன சொன்னேன் நல்லா யோசிங்க நல்ல முடிவு சொல்லுங்கன்னு சொன்னா அவளை தினமும் ஓட்டலுக்கும் மகாபலிபுரத்துக்கும் கூட்டிட்டு போய் எதை காட்ட நினைக்கறீங்க உங்க எண்ணங்கள் இவ்ளோ கேவலமானதா” என கேட்க அதற்கு கோபப்பட்ட ரிஷி அவனிடம்

   

”நீ அதைப்பத்தி சொல்லாத நான் எந்தவித தப்பான நோக்கத்தோடும் அவளை அடைய நினைக்கலை. அதை புரிஞ்சிக்க”

   

“ஓ நல்லா புரிஞ்சிக்கிட்டேன் சே உங்களை நான் எவ்ளோ உயரத்தில வெச்சிருந்தேன் ஆனா இன்னிக்கு நீங்க அவளை ஓட்டலுக்கு கூட்டிட்டு போய் சீ சீ” என வெறுப்புடன் பேச 

   

   

அதைக்கேட்ட ரிஷிக்கு கோபம் வந்து அர்ஜூன் கன்னத்தில் பளார் என ஒரு அறைவிடவும் அதைப்பார்த்த நந்தினி கத்தினாள்

   

”அத்தான் ஏன் இப்படி அடிச்சீங்க” என கத்த அவளது கையை பிடித்து தன்னிடம் இழுத்துக்கொள்ள அர்ஜூனும் இன்னொரு கையை  பிடித்து தன் பக்கம் இழுத்துக்கொள்ள முயற்சிக்க இரு ஆண்களிடமும் வசமாக மாட்டிக்கொண்டு தவித்தாள் நந்தினி.

   

10 நிமிட சண்டையை தொடர்ந்து அங்கு வந்த டிராபிக் போலீஸ் அதிகாரி 3 பேரையும் கைது செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று ஒப்படைத்தார். ரிஷியை பற்றி தெரிந்த உடனே 3 பேரையும் வெளியே விட்டார் போலீஸ் அதிகாரி. வெளியே வந்த ரிஷி நந்தினியின் கையை பிடிக்க அதை தடுத்து அவளை தன்னிடம் இழுத்துக்கொண்டான் அர்ஜூன்

   

”அர்ஜூன்” என ரிஷி கத்த அவன் கோபமாக

   

”என்ன” என மறுபடி கத்தினான். அவனின் இந்த கோபத்தை முதல் முதலாக பார்த்த காரணத்தால் ஆச்சர்யமடைந்தவன்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.