(Reading time: 13 - 26 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

”எனக்கு நந்தினி வேணும்” என்றான்

   

“எதுக்கு ஓட்டல்ல ரூம் எடுத்து ஒரு நாள் தங்கறதுக்கா நான் ஒத்துக்கமாட்டேன்” என அவன் கத்தவும் ரிஷி

   

”ஏய் கத்தாதடா நாம போலீஸ் ஸ்டேஷன் வெளிய இருக்கோம் எல்லாரும் பார்க்கறாங்க பாரு வா வீட்ல போய் பேசிக்கலாம்”

   

“இதுல பேச எதுவும் இல்லை. உங்க புத்தி இவ்ளோ கேவலமா போகும்னு நான் நினைக்கலை”

   

“வார்த்தையை விடாதடா நான் எந்த தப்பும் செய்யலை”

   

”ஆமாம் அதுக்குள்ளதான் நான் வந்துட்டேனே இல்லைன்னா பாவம் என் தங்கச்சி அவளோட வாழ்க்கையை நீங்க சீரழிச்சிட்டு நாளை மறுநாள் வர்ற அந்த 3 பொண்ணுங்கள்ல எவளோ ஒருத்தியை கல்யாணம் பண்ணியிருப்பீங்கதானே”

   

என அவன் பேசவும் ரிஷிக்கு பற்றிக்கொண்டு வந்தது. அவன் உடனே அர்ஜூனின் சட்டை காலரை பிடிக்க நந்தினி ரிஷியை தடுத்தாள்

   

”அத்தான் விடுங்க வேணாம்”

   

“நீ பேசாத இங்க பாரு உன் அண்ணன் என்ன பேச்சு பேசறான் பாரு நான் ஒண்ணும் தப்பான எண்ணத்தோடு உன்கிட்ட பழகலைன்னு சொல்லு உன் அண்ணன்கிட்ட வாய்க்கு வந்த மாதிரி பேசறான் பாரு” என அவன் பேசி முடிக்கும் முன்பே அர்ஜூன் கத்தினான்

   

”போதும் நிறுத்துங்க நடிக்காதீங்க உண்மையை சொல்லுங்க அவள்கிட்ட நீங்க தப்பா ஒரு விசயம் கூட செய்யலை” என அவன் ரிஷியையே உன்னிப்பாக பார்த்து கேட்கவும் உடனே அவன் சட்டையிலிருந்து கையை விலக்கிக்கொண்டு தள்ளி நின்றான் ரிஷி. அவனின் மௌனத்தைக்கண்டு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.