(Reading time: 13 - 26 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

“அவனுக்கு ஒண்ணும் இல்லை டயர் பஞ்சர் ஆயிடுச்சி அதை சரிபண்ணிட்டு அவன் வருவான் நீ அமைதியா இரு” என அவளை சமாதானப்படுத்த முயற்சிக்க அவளோ அவனிடம் மேலும் மேலும் கோபமாகவே பேசினாள்.

   

“பிரச்சனை அது இல்லை அண்ணா என்னை நம்பறாரு. நான் உங்க கூட ஒட்டல்ல இருந்ததை பார்த்து அண்ணாவுக்கு என்மேல கோபம் அவரை நான் சமாதானம் செய்யனும் இப்ப போய் நீங்க இப்படி செய்யலாமா திரும்புங்க அண்ணாகிட்ட என்னை கொண்டு போய் விடுங்க”

   

“நந்தினி உனக்கு என்கூட இருக்க விருப்பமில்லையா” என பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டவனைப்பார்த்து முறைத்தாள்

   

“அங்க அண்ணனை தனியா விட்டுட்டு என்னால உங்க கூட வரமுடியாது” என கத்தவும் அவனுக்கு இருந்த கோபத்தில் வண்டியை திருப்பி வேகமாக ஓட்டிக்கொண்டு நேராக அர்ஜூன் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான்.

   

டயரை மாற்றிவிட்டு வண்டியில் ஏற முயன்றவன் பின்னாடி ஏதோ வண்டி ஹாரன் அடிக்கும் சத்தம் கேட்டு திரும்பிப்பார்க்க அங்கு ரிஷியும் நந்தினியும் இருக்கவே வேகமாக அங்கு வந்து நின்றான். அதற்குள் நந்தினி அர்ஜூனிடம் ஓடிவந்து ஒட்டிக்கொள்ளவும் அவளை சமாதானப்படுத்திவிட்டு ரிஷியை பார்த்தான்

   

”இது தப்பு” என கத்த அதற்கு ரிஷியும் கத்தினான்.

   

“எது தப்பு”

   

“நீங்க செய்றது”

   

“நான் என்ன செஞ்சேன்” 

   

“அவளை தூக்கிட்டு போனது தப்பு”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.