(Reading time: 13 - 26 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

“சத்தியமாடா வேணா போய் பாரு” என சொல்ல உண்மையாகவே பின்பக்க டயர் பஞ்சராகியிருக்க அவன் அந்த டயரையே சோதனை செய்து பார்த்தான். அவனது சந்தேகம் ஊர்ஜிதமானது.

   

”அண்ணா இது தப்பு நீங்களே டயரை பஞ்சர் பண்ணிட்டு இப்படி பேசாதீங்க” என அவன் சொல்லிக்கொண்டே திரும்ப அங்கு ரிஷியும் இல்லை அவனது காரும் இல்லை காரில் இருந்த நந்தினியும் இல்லை.

   

”சே ஏமாந்துட்டேனே” என நினைத்து கோபப்பட்டவன் அவசரமாக ரிஷிக்கு போன் செய்தான். ரிஷியின் போன் சுவிட்ச் ஆப் என வரவே அவனுக்கு கோபம் அதிகமாகி என்ன செய்வது என தெரியாமல் ரிஷியின் மீதான கோபத்தை டயரை சரிசெய்வதில் காட்டி ஒரு வழியாக அந்த வேலையை முடித்தவன் மீண்டும் தன் போன் மூலம் நந்தினியையும் ரிஷியையும் பிடிக்க எண்ணினான் ஆனால் இருவரது போனும் சுவிட்ச் ஆப் என வரவும் ஏமாந்துப் போனான் அர்ஜூன். 

   

அர்ஜூனை ஏமாற்றி அவன் தங்கையை அபகரித்த சந்தோஷத்தில் குதூகலமாக வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றான் ரிஷி. அவனது சந்தோஷத்தைக்கண்டு கோபமடைந்த நந்தினியும் அவனிடம் கேபமாக

   

”இது அநியாயம்” என கத்தினாள்

   

”எது அநியாயம்” என சாதாரணமாக காரை ஓட்டிக்கொண்டே கேட்டான் ரிஷி 

   

“நீங்க செய்றது சரியில்லை அண்ணா நம்மளைப்பத்தி என்ன நினைப்பாரு”

   

“அவன் எதையாவது நினைச்சிட்டு போறான் விடு”

   

“இல்லை வண்டியை திருப்புங்க நான் அண்ணாகிட்ட போகனும்” என பிடிவாதம் பிடித்தாள் நந்தினி.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.