(Reading time: 13 - 26 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

“வேணாம் அர்ஜூன் இப்படி பேசாத”

   

“நான் அப்படித்தான் பேசுவேன் உங்க வீட்ல பார்த்த 3 பொண்ணுங்களை உங்களுக்கு பிடிக்கலை. யாராவது ஒரு கேனச்சிறுக்கி புத்திக்கெட்டு போய் இருப்பா அவளை பிடிச்சி கல்யாணம் பண்ணிக்கலாம் அப்படியே பாட்டிக்கிட்ட அவளை அடிமையா ஒப்படைக்கலாம்னு இருக்கீங்களோ முடியாது அண்ணா உங்க எண்ணம் நிறைவேற நான் ஒருக்காலும் விடமாட்டேன்” என கோபமாக பேசிவிட்டு நந்தினியைப் பார்த்தான்

   

”இதப்பாரு தங்கச்சி நான் கேட்கறதுக்கு பதில் சொல்லு என்னடா இவன் இப்படி கேட்கறானேன்னு தப்பா நினைக்காத நான் எது செய்தாலும் அது உன் நல்லதுக்குத்தான் புரியுதா”  என அவன் கேட்கவும்

   

“ம்” என தலையாட்டினாள் நந்தினி

   

”ரிஷி அண்ணா உன்கிட்ட தப்பா வேற என்னென்ன செய்தாரு” என கேட்க அவளுக்கு புரியவில்லை. ரிஷிக்கு புரிந்தது

   

”டேய் நான் அவளை எதுவும் செய்யலைடா அதான் சொல்றேன்ல வெறும் முத்தம் தான் கொடுத்தேன்னு” என அவன் கத்த அதற்கு அவனைப்பார்த்து கத்தினான் அர்ஜூன்

   

“நீங்க பேசாதீங்க நான் என் தங்கச்சிகிட்ட பேசறேன்” என சொல்லிவிட்டு நந்தினியை பார்த்தான்

   

”சொல்லும்மா நீ சொல்லு அண்ணா உன்கிட்ட எப்படி நடந்துக்கிட்டார்னு சொல்லு” என கேட்க அவள் மெதுவாக அவனிடம்

   

”அண்ணா அது அவரு நேத்து 2 முறை கன்னத்தில முத்தம் கொடுத்தாரு அப்புறம் இன்னிக்கு ஓட்டல் ரூம்ல என்னை கட்டிப்பிடிச்சி பெட்ல படுக்க வைச்சி” என அவள் முடிக்கும் முன்பே

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.