(Reading time: 17 - 34 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது அவளின் அதிர்ச்சியைக் கண்டவன்

   

”என்ன ஹரிணி ஷாக்காகற வா வாழ்க்கையை வாழலாம், கமான் ஹரிணி” என அவளின் கையை மென்மையாக பற்றிக்கொண்டு பெட்ரூம் அழைத்துச் சென்றான், அவனின் ஒவ்வொரு செயலும் அவளுக்கு அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் தந்தது, உண்மை என்னவென அவளுக்கு நன்றாகத் தெரியும் என்பதால் அவன் என்னதான் செய்கிறான் என்பதை பார்ப்பதற்காகவே அவனுடன் அன்பாக நடந்தபடி சென்றாள். அவளின் கோபம் விலகி அன்புடன் இருப்பதைக் கண்டு தருண் மகிழ்ந்து அவளை பெட்ரூமில் இருந்த கட்டிலில் அமர வைத்தான்.

   

”நீ ரொம்ப அழகா இருக்க ஹரிணி” என்றான் அதைக்கேட்டு அவளுக்கு வெட்கம் கூட வரவில்லை இவன் ஏதோ நாடகம் ஆடுகிறானே, தன்னை மாட்டிவிட ஏதாவது சதித்திட்டம் தீட்டுக்கிறானோ என நினைத்து சந்தேகமாக அவனைப் பார்க்க அவனோ

   

”ஹரிணி அல்வா சாப்பிடலாமா” என கேட்க அவளும் சரியென தலையாட்டினாள்.

   

அவளுக்கு தான் வாங்கி வந்த அல்வாவில் இருந்து ஒரு துண்டு கிள்ளி அவளுக்கு ஊட்டிவிட வர அவளோ தடுத்து அதை தன் கையில் வாங்கிக் கொண்டாள்

   

”இன்னுமா என் மேல உனக்கு கோபம் போகலை, நான் உனக்கு ஊட்டிவிடக் கூடாதா ஹரிணி” என கேட்க அவளோ தயங்கினாள் அல்வாவில் ஏதாவது விஷம் கலந்திருப்பானோ என நினைத்து பயந்து அதை அவனுக்கே ஊட்டிவிட வந்தாள் அவனோ தடுத்தான்

   

”இது உனக்காகதான் வாங்கிவந்தேன் ரொம்ப ஸ்பெஷல் நீ என்னடான்னா எனக்கு தர்ற நீ சாப்பிடு” என அவளுக்கே கட்டாயமாக ஊட்டிவிட முயல வேறு வழியில்லாமல் அந்த அல்வாவை சாப்பிட்டாள். அவனும் தாமதிக்காமல் அடுத்தடுத்து அல்வாவை ஊட்டிவிட ஊட்டிவிட அவளும் சாப்பிட்டு ஒரு கட்டத்தில்

   

”போதும் திகட்டுது” என்றாள் அதைக்கேட்டு அவனும் 

   

”ஓகே மீதியை நான் அப்புறம் சாப்பிடறேன், இதை போய் பிரிட்ஜ்ல வைச்சிட்டு வரேன் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.