(Reading time: 17 - 34 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

இங்கயே இரு உடனே வந்துடறேன்” என சொல்லிவிட்டு அவன் அறையை விட்டு வெளியேறிச் செல்ல அவளுக்கு அவன் மீதான சந்தேகம் அதிகமானது, அதைவிட அவன் தந்த அல்வா அவளை என்னவோ செய்தது, கண்கள் சொருகுவது போல இருக்கவும் அதிர்ந்தாள்

   

”அடப்பாவி அல்வால என்னடா வைச்ச, மயக்க மருந்து கலந்துட்டானா இப்ப எதுக்கு மருந்து கலந்தான், ஒருவேளை நம்மளை கொன்னுடுவானோ அய்யோ இவன்கிட்டயிருந்து நம்மளை நாம காப்பாத்திக்கனும்” என நினைத்தவள் அவசரமாக எழுந்து நின்றாள் அவளின் உடல் தள்ளாடியது. ஆயினும் மயங்கி போவதற்குள் தருண் என்ன செய்கிறான் என பார்க்க மெதுவாக அறையை விட்டு வெளியேறிச் செல்ல தருண் வாங்கி வந்த அல்வா பாக்ஸ் குப்பையில் இருப்பதைக் கண்டு அதிர்ந்து அவன் எங்கே என தேடிக் கொண்டே வாசலுக்கு செல்ல அங்கு தருண் யாருடனோ பேசிக் கொண்டிருந்தது, அவளுக்கு தெளிவாகக் கேட்டது

   

”இதப்பாரு எனக்கு வேற வழி தெரியலை நீ கேட்கற பணத்தை என்னால தரமுடியாது ஆனா, நீ கனவுலயும் எதிர்பார்க்காத கிடைக்காத ஒரு அருமையான வாய்ப்பை நான் உனக்கு தரேன் இதோட நீ என்னை விட்டுடனும் புரியுதா“

   

”உன் பேச்சைக் கேட்டு ஹரிணியை பலாத்காரம் செய்றது போல நடிச்சேன், கடைசியில எனக்கு வேலை போச்சி வேற எங்கயும் என்னை வேலைக்கு சேர்த்துக்கலை, நான் செய்த தப்பு என் வீடு வரைக்கும் வந்து என்னை யாரும் மதிக்கலை, தனியா தொழில் தொடங்கலாம்னா காசு இல்லை, உன்கிட்ட 5 லட்சம் கேட்டா, நீ கைவிரிக்கற, இப்ப என்னடான்னா அருமையான வாய்ப்பு அது இதுங்கற, உன் பேச்செல்லாம் நம்பி ஒரு முறை ஏமாந்தது போதும் ஆளை விடு மரியாதையா நான் கேட்ட பணத்தை கொடு இல்லைன்னா ஹரிணிகிட்ட உன்னோட தில்லாலங்கடி வேலைகளை சொல்லிடுவேன், நிவேதினி, பவானி வரிசையில ஹரிணியோட வாழ்க்கையை நீ நாசமாக்கறேன்னு சொல்லுவேன்”

   

”என்னடா மிரட்டறியா அப்படியே நீ சொன்னாலும் அவள் என்ன நம்பவா போறா, அவளுக்கு நான்தான் உசுரே, நான் என்ன சொன்னாலும் கேட்பா”

   

”இப்ப பணம் தருவியா மாட்டியா“

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.