(Reading time: 17 - 34 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

ரயில்ல விழுந்து தற்கொலை செய்துக்கிட்டா, எப்படியோ அவளோட கதை முடிஞ்சதுன்னு நான் நிம்மதியாயிட்டேன்“

   

”சரி அதுக்கு ஏன் ஹரிணியை கல்யாணம் செய்துக்கிட்ட”

   

”வேற எதுக்கு எல்லாம் இந்த ராஜ வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுதான் ஆனா, எல்லாம் சரியா போச்சி, இப்ப இவளும் எனக்கு குழந்தை வேணும்னு பிடிவாதமா இருக்கா, அவளை கூட்டிட்டு அநாதை ஆசிரமம் வரைக்கும் போய் வந்துட்டேன், ஏதாவது ஒரு குழந்தையை தத்து எடுக்க வைக்கலாம்னு ரொம்ப முயற்சி செய்தேன் ஆனா, அவள் ஒத்துக்கலை இப்ப என்ன செய்றதுன்னு தெரியலை“

   

”ஷ்ஷ்ஷ் டேய் நீ செய்றது பாவம்டா பவானியை உன் அப்பா அம்மா கல்யாணம் செய்து வைச்சாங்க ஆனா, ஹரிணியை நீதானே திட்டம் போட்டு கல்யாணம் செய்துக்கிட்ட அது தப்பில்லையா”

   

”தப்பு எது சரி எதுன்னு சொல்ற இடத்துல நீ இல்லை புரியுதா“

   

”சரி எக்கேடு கெட்டுப் போ, என்னை எதுக்காக இங்க வரச் சொன்ன, ஹரிணியோட வீடுதானே இது, அவள் என்னைப் பார்த்துட்டா பெரிய பிரச்சனையாயிடும்“

   

“எதுவும் ஆகாது அவளுக்கு அல்வா ஊட்டிவிட்டு வந்தேன்”

   

”அல்வா ஒண்ணுதான் கேடு உனக்கு”

   

”ப்ச் அவசரப்படாத அல்வால போதை மருந்து வைச்சிருக்கேன்“

   

”அடப்பாவி எதுக்குடா இப்படி செய்த, நீ என்னதான் திட்டம் தீட்டி வைச்சிருக்க”

   

”என்னால ஹரிணிகிட்ட போய் நான் ஆண்மையில்லாதவன்னு உண்மையைச் சொல்லி அவளை இழக்க முடியாது, பவானியை போல அவளும் டைவர்ஸ்ன்னு ஆரம்பிப்பா, பவானியை விட இவள் ரொம்ப புத்திசாலி, இவளை என்னால டார்ச்சர் பண்ணி என் வழிக்கு 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.