(Reading time: 17 - 34 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

ஓடினாள் கதவை சாத்தி தாள்பாள் போட்டுவிட்டு, கதவுக்கு ஒரு சின்ன டேபிளை முட்டுக் கொடுத்துவிட்டு பார்த்தாள் கண்கள் சொருக ஆரம்பித்துவிட்டது இனி தன் உடல் தன் பேச்சைக் கேட்காது என உணர்ந்தவள் தன் செல்போனை தேடினாள் கிடைத்தது, அதில் இருந்து அவசரமாக யாருக்கோ போன் செய்து பேசினாள்

   

”என்னை காப்பாத்து சீக்கிரம்” என்று மட்டுமே அவளால் சொல்ல முடிந்தது, அதோடு அவள் மயங்கி சரிந்தாள்

   

தருணுக்கு திக்கென்றது

   

”சே நாம பேசினதெல்லாம் ஹரிணி கேட்டுட்டா போல இருக்கு, இப்ப என்ன செய்றது வசமா மாட்டிக்கிட்டேன்” என புலம்ப வந்தவனோ

   

”ப்ச் மாட்டிக்கிட்டது உறுதியாயிடுச்சி இனியும் தாமதிக்காத, யாராவது பார்க்கறதுக்குள்ள எப்படியாவது வீட்டுக்குள்ள போயிடனும்”

   

“எப்படி போறது உள்ள தாள்பாள் போட்டிருக்கு“

   

”கதவை உடைக்கலாம் தப்பில்லை“ என சொல்ல தருணும் அதற்கு சரியென்றான், இருவரும் இணைந்து கதவை உடைத்தார்கள், தாள்பாள் உடைந்தது, உடனே இருவரும் உள்ளே நுழைந்தார்கள். வந்தவன் உடைந்த கதவை சரியாக்கி மூடிவிட்டு வருவதற்குள் தருண் வீடு முழுவதும் ஹரிணியை தேடிவிட்டு அவளின் பெட்ரூம் கதவை திறக்கப் பார்த்தான் முடியவில்லை, அதையும் உடைக்க முயன்றான், அவனுக்காக மற்றவனும் உதவி செய்தான், அவர்கள் பலம் கொண்டு முயன்றும் கதவை திறக்க இயலவில்லை, நேரம் ஓடியது இருவருக்கும் என்ன செய்வதென தெரியவில்லை

   

”என்னடா இப்படி சொதப்பிடுச்சி அவள் மயக்கத்தில இருக்கறதா சொன்னியே”

   

”அட நான் உண்மையைதான் சொல்றேன், நான் கொடுத்த அல்வாவை சாப்பிட்டு எப்பவோ அவள் மயங்கியிருக்கனும் ஆனா, எப்படி அவள் மயங்காம இருந்தாள்ன்னுதான் எனக்குப் புரியலை”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.