Page 13 of 15
”ஆதாரம் இல்லாம அவனை கைது செய்ய மாட்டாங்க“
”உங்களுக்கு நடந்ததை சொல்லி கைது செய்ய வைக்கலாம்”
”வேணாம் அவன் ரொம்ப கிரிமினல், எப்படியாவது தப்பிச்சி வந்துடுவான்”
”அப்ப வேற என்ன செய்யலாம்னு இருக்கீங்க”
”அவனை நேருக்கு நேரா சந்திக்கப் போறேன்”
”வேணாம் ரிஸ்க்“
”இந்த முறை தனியா இல்லை உங்க உதவி வேணும்“
”என்னோட உதவியா”
”ஆமாம்”
”எப்படி”
”உங்க முகமும் இளங்கோவோட முகமும் ஏறக்குறைய ஒரே மாதிரிதான் உத்துப் பார்த்தாதானே வித்தியாசம் தெரியும்“
”அதுக்கு இளங்கோவை போல நான் நடிக்கனுமா“
”ஆமாம்”
”அவன் எப்படி நம்புவான் இளங்கோவை கொன்னதே அவன்தானே“