(Reading time: 17 - 34 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

”ஆமாம்”

   

”அப்புறம் நான் இளங்கோ போல நடிச்சா நம்ப மாட்டானே“

   

”கரெக்ட்தான் இளங்கோவோட ஆவியா நடிக்கலாமே” என சொல்லவும் முகிலனுக்கு வியப்பாக இருந்தது

   

”ஆவியா“

   

”ஆமாம்“

   

”இது சாத்தியப்படுமா”

   

”முயற்சி செய்து பார்க்கலாம் இளங்கோவும் நீங்களும் இரட்டை சகோதரர்கள் என்கிற விசயம் தருணுக்கு தெரியாது, இளங்கோவை அவன்தான் கொன்னான், இப்ப நீங்க மட்டும் இளங்கோவோட ஆவி போல அவன் முன்னாடி அடிக்கடி வந்து அவனை பயமுறுத்தினா போதும், தன்னால அவன் செய்த தப்பை உளறுவான், அதை ஆதாரமா வைச்சி போலீஸ்கிட்ட சொன்னா, அப்ப அவங்க அவனை கைது செய்வாங்க ஜெயில் தண்டனையும் கிடைக்கும்”

   

”கேட்க நல்லாயிருக்கு ஆனா, அவன் ஒண்ணும் சாதாரணமானவன் கிடையாது, படு மோசமான கிரிமினல், நான் ஆவியில்லைன்னு சட்டுன்னு கண்டுபிடிச்சிடுவான், அப்புறம் எனக்கு எந்த ஆபத்து வந்தாலும் பரவாயில்லை உங்களுக்கு ஏதாவது ஆச்சின்னா“

   

”எதுவும் ஆகாது தருண் என்னை விடமாட்டான், அவனை பொருத்தவரைக்கும் நான் பொன்முட்டை இடுற வாத்து, அவசரப்பட்டு என்னை கொன்னுட மாட்டான் இளங்கோவுக்காக நடிங்க ப்ளீஸ்” என கெஞ்சினாள்

   

”சரி இளங்கோவோட சாவுக்கு நியாயம் வழங்க நான் ஆவியா நடிக்கிறேன் எனக்கு சம்மதம்” என சொல்ல அவளுக்கு நிம்மதியானது.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.