”ப்ச் இப்ப என்னடா செய்றது, இந்தக் கதவு வேற திறக்க முடியலையே”
”கதவுக்கு அந்த பக்கம் வெயிட்டா எதையோ முட்டுக் கொடுத்து வைச்சிருக்கா போல அதான் நம்மால திறக்க முடியலை”
”இனி அவள் மயக்கம் தெளிஞ்சி எழுந்து வந்தாதான் முடியும்”
”அவள் வர்றது அப்புறம் வந்த பின்னாடி என்னை என்ன செய்வாள்ன்னு தெரியலையே”
”வசமா மாட்டிக்கிட்ட தருண், உன்னால நானும் மாட்டிக்கனுமா நான் கிளம்பறேன்“
”டேய் இருடா என்னடா இப்படி அம்போன்னு விட்டுட்டு போற“
“போதும்டா நான் கெட்டவன்தான் ஆனா, நீ அயோக்கியன், துரோகி, நிவேதினி, பவானி, ஹரிணின்னு எல்லாருக்கும் துரோகம் செய்திருக்க, உன்னை நம்பினா நீ என்னையே மாட்டிவிட்டுடுவ ஆளை விடு இனி உன் பக்கம் கூட நான் வரமாட்டேன்“ என சொல்லிவிட்டு அவன் ஓடியேவிட தருணுக்கு பயம், குழப்பம், கோபம் என ஒன்று சேர ஆக்கிரமித்தது.
முழுதாக ஒரு மணி நேரம் கழித்து காலிங் பெல் சத்தம் கேட்டதும் அதிர்ந்தான் தருண்.
”என்னது இது மணி 11.30 ஆகுது இந்நேரம் யார் வந்திருப்பா” என நினைத்தபடியே யார் என பார்க்க சென்றான்.
காலிங் பெல் விடாமல் அடிக்கவே எரிச்சலாகி கதவை பட்டென திறந்தான், அந்தப் பக்கம் இருந்த உருவத்தைக் கண்டதும் அவனுக்கு பேச்சே எழவில்லை, இதயம் தடதடவென அடித்துக் கொண்டது வந்திருந்தவனோ
”ஹரிணி எங்க” என்றான் கோபமாக அவ்வளவுதான் தருணுக்கு மயக்கமே வந்து தரையில் சுருண்டு விழுந்துவிட்டான், வந்தவனோ அவசர அவசரமாக ஹரிணியை தேடிச் சென்றான்.