(Reading time: 17 - 34 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

ஒத்துக்க மாட்டேன் உன்னை கொல்லப்போறேன் பாரு” என அவனை தாக்க வர அவனை அசால்ட்டாக தள்ளிவிட்டுவிட்டு

   

”டேய் அவசரப்படாத நான் சொல்றதைக் கேளு எனக்கே 5 லட்சம் கிடைக்கும்னா உனக்கு எவ்ளோ கிடைக்கும் பாரு”

   

”எனக்கு பணம் தேவையில்லை, குழந்தைதான் வேணும் உன்னால முடிஞ்சா வா இல்லையா வந்த வழியை பார்த்துக்கிட்டு போய்கிட்டே இரு“

   

“அப்படியெல்லாம் போக முடியாது, உன்னைப் பத்தின எல்லா உண்மையையும் நான் ஹரிணிகிட்ட சொல்லிடுவேன், ஒழுங்கு மரியாதையா நான் சொன்னதுக்கு சரின்னு சொல்லு இல்லை உனக்குதான் நஷ்டம், எனக்கொன்னும் இல்லை என்ன சொல்ற” என கேட்க தருண் குழம்பினான்.

   

தருண் என்ன பதில் சொல்லப்போகிறான் என தெரிந்துக் கொள்ள ஹரிணியும் ஆர்வமாக காத்திருந்தாள், அவன் தவறாக முடிவு எடுப்பானா அல்லது தனக்காக வந்துவிடுவானா அந்தளவுக்கா அவன் அயோக்கியனாக இருப்பான் பார்க்கலாம் என நினைத்தபடி கதவுக்கு பின் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தாள்.

   

தருணும் பலவிதமாக யோசித்தான், எப்படி யோசித்தாலும் தனக்குதான் சிக்கல் என புரிந்துக் கொண்டவன் நீண்ட பெருமூச்சுவிட்டு வந்தவனிடம்

   

”சரி உன் நண்பனை வர வழை” என சொல்லிவிட அவ்வளவுதான் ஹரிணியின் உயிரே போய்விடும் போலானது, தருண் இந்தளவுக்கு தரம் இறங்கிப் போவான் என அவள் எதிர்ப்பார்க்கவில்லை, இனியும் தாமதித்து பிரயோசனம் இல்லை என புரிந்துக் கொண்டவள் சட்டென கதவை சாத்தி தாள்பாள் போட்டாள். அந்தச் சத்தம் கேட்டு அதிர்ந்தான் தருண் கதவை திறக்க முயன்றான் முடியவில்லை 

   

”ஹரிணி ஹரிணி நீயா கதவு மூடின கதவை திற ஹரிணி” என அவன் கதவை தட்டோ தட்டென தட்டினான், எப்படியும் அவன் கதவை உடைத்துவிடுவான் என நினைத்து பயந்தாள் அவளின் உடல் தள்ளாடியது, எப்படியும் நாம் மயங்கிவிடுவோம் என நினைத்து தன் அறைக்கு 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.