உங்ககிட்ட சொன்னேன் அவனை கல்யாணம் செய்துக்க வேணாம், அவனுக்கு பாடம் கத்துக்கொடுக்க தேவையில்லை, அவன் எல்லாம் மனுஷனே இல்லை, செஞ்ச தப்பை நினைச்சி ஒரு நாளும் அவன் குற்ற உணர்ச்சியில திருந்த மாட்டான்னு நீங்கதான் நம்பலை, இப்ப பாருங்க இவ்ளோ தூரம் போயிருக்கான், கொஞ்சம் விட்டிருந்தா அவன் சுயநலத்துக்காக உங்களை கொன்னாலும் கொன்னிருப்பானே”
”அதே பயம்தான் எனக்கும் இந்தளவுக்கு தரம் குறைந்து அவன் போவான்னு நான் ஒருநாளும் நினைச்சிப் பார்க்கலை, பவானிக்காகவும் இளங்கோவுக்காகவும் அவனை பழிவாங்க நினைச்சேன், அவன் செஞ்ச தப்பை உணர்த்தனும்னு நினைச்சிதான் நான் அவனை கல்யாணம் செய்துக்கிட்டேன் ஆனா, இப்போ நான் செய்தது பெரிய தப்புன்னு தோணுது முகிலன்”
”சரி பயப்படாதீங்க, ரிலாக்ஸ் உங்களுக்கு அவன் போதை மருந்து கொடுத்திருக்கான், பெரிசா எந்தப் பிரச்சனையும் இல்லை, சைட் எபக்ட் வராதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க, அடுத்து என்ன செய்யலாம்னு இருக்கீங்க”
”தெரியலை முகிலன் ஆனா, அவனை ஏதாவது செய்தே ஆகனும்”
”மறுபடியுமா வேணாம் இவ்ளோ தூரம் ஆன பின்னாடி திரும்பவும் அவன் பக்கம் போகாம இருக்கறதுதான் உங்களுக்கு நல்லது“
”ஆனா நான் சத்தியம் செய்திருக்கேன், அவனை பழிவாங்கனும்னு”
”ரிஸ்க் எடுக்காதீங்க ஏற்கனவே அவனால பட்டது போதாதா, இங்க பாருங்க ஆஸ்பிட்டல் வரைக்கும் கொண்டு வந்துட்டான், அவனை நம்பாதீங்க அவன் எந்த எல்லைக்கும் போக தயங்க மாட்டான், இப்பவே உங்க மானத்தோட விளையாட முடிவு செய்தவன், நாளைக்கு உங்க உசுரோட விளையாட மாட்டான்னு என்ன நிச்சயம்”
”அதுக்காக அவனை அப்படியே விட முடியாது, என்னைப் போல இன்னும் பல பொண்ணுங்களை அவன் ஏமாத்திக்கிட்டே இருப்பான், அவனை சும்மா விடக்கூடாது”
”வேணும்னா போலீஸ்ல அவனை பத்தி புகார் தரலாமே”