”இதப்பாரு தேவா இன்னும் பிரச்சனை முடியலை. அந்த பொண்ணு போயிட்டா சரி இங்க விக்ரம் இருக்கானே”
“அதான் நான் இவளை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்ங்கறேனே தாமரை அப்புறம் என்ன”
“இரு நல்ல நாள் நான் பார்க்கறேன் நீ நினைச்ச நாள்ல கல்யாணம் பண்ணி அதனால உங்களுக்கு ஏதாவது விபரீதம் நடக்கப் போகுது. நான் நல்ல நாள் குறிக்கறேன் அதுவரைக்கும் நீ அமைதியா இரு” என சொல்ல
”சரி தாமரை சீக்கிரமா ஒரு நல்ல நாள் பாரு அதுக்குள்ள நான் தனியா ஒரு வீடு பார்க்கறேன். கல்யாணம் ஆனதும் அங்க நாங்க போயிடறோம்”
“சரி அதை முதல்ல செய் மத்தவங்களுக்காக காத்திருந்தா உன் வாழ்க்கைதான் கெடும். உன் காதலை நீதான் காப்பாத்திக்கனும் போ இப்பவே போய் வீடு தேடு” என சொல்ல உடனே தேவா கீர்த்தனாவிடம்
”கீர்த்தனா உனக்கு இந்த ஹாஸ்டல் பில்டிங் ப்ளான் வரைய தெரியும்னு சொன்னியே, எனக்கு இப்ப ஒரு ப்ளான் வரைஞ்சி தரமுடியுமா அதுவும் மாடர்னா இருக்கனும், நவீன வசதிகளும் இருக்கனும் 3 அடுக்கில இருக்கனும், பெரிய பரப்பளவில இருக்கனும் முடியுமா” என கேட்க அவளோ சற்று தாமதித்து எதையோ யோசித்து
”சரி நான் செய்றேன் ஆனா அதுக்கு தேவையான பொருள் எல்லாம்”
“தாஸ் கொண்டாந்து கொடுப்பான் நீ எனக்கு ப்ளான் போட்டுக் கொடு”
“எதுக்கு தேவா இப்ப இந்த ப்ளான், என்ன பில்டிங் கட்டப்போற” என சுந்தரம் கேட்க அதற்கு தேவாவோ
”தாத்தா அந்த ஹாஸ்டல் பில்டிங்காகத்தானே என்னை இப்படி அலைக்கழிச்சி கடைசியில
Next episode pls