(Reading time: 40 - 80 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

நானே வீட்டைவிட்டு வெளிய வந்துட்டேன். அதனால நானே அந்த ஹாஸ்டல் பில்டிங் கட்டலாம்னு முடிவு பண்ணிட்டேன்.”

   

“உன்னால முடியுமா”

   

”முடியனும் மத்தவங்க முன்னாடி நான் வாழ்ந்துக் காட்டனும், முக்கியமா அந்த சரண்யா முன்னாடி, இந்த விக்ரம் முன்னாடி, பவி ஒரு கணக்கே இல்ல என் அப்பன் முன்னாடி வாழனும், அதான் முக்கியம் எனக்கு” என ஆவேசமாக சொல்லிவிட்டு தாமரையிடம்

   

”தாமரை நான் உன்னை நம்பறேன், கீர்த்தனாவை பத்திரமா பார்த்துக்க கல்யாணம் ஆனதும் எல்லா பிரச்சனையும் சரியாயிடும்” என சொல்ல சுந்தரமோ எதையோ யோசித்து

   

”தேவா முதல்ல நீ உன்னை நிரூபிக்கற வழியைப் பாரு, அதுக்கப்புறம் கல்யாணத்தை பத்தி பேசலாம், அந்த விக்ரம்காக நீ பயப்படற ஆனா கீர்த்தனா இங்க இருக்கறவரைக்கும் எந்த பிரச்சனையும் வராது. நீதான் அவளை இங்க கூட்டிட்டு வந்த நீ எப்ப கூப்பிட்டாலும் அவளை அனுப்ப நான் தயாரா இருக்கேன். அதுக்கு முன்னாடி நீ ஊருக்குள்ள நல்ல பேர் எடுத்தே ஆகனும்”

   

“இப்பவும் எனக்கு நல்ல பேர் இருக்கே”

   

“இருக்கு அப்புறம் ஏன் உன் வீட்டை விட்டு வந்த”

   

“அது இவளோட வாழத்தான்“ என அவன் சொல்ல சுந்தரத்துக்கு சுருக்கென பட்டு

   

”சரி தாராளமா வாழ்ந்துக்க, அதுக்கு முன்னாடி ஏகப்பட்ட பிரச்சனைகளோட அந்த பொண்ணை கல்யாணம் பண்ணா உன் குடும்ப வாழ்க்கையில கஷ்டங்களும், வேதனைகளும், கோபதாபங்களும்தான் இருக்கும். இதே நீ நினைச்ச ஹாஸ்டல நீ கட்டிட்டு எல்லார் வாயையும் அடைச்சிட்டு முறையா உன் வீட்டோட சம்மதத்தோட அவள் கையை பிடிச்சேன்னா அவளுக்கும் கௌரவமா இருக்கும், இப்படி ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கறதால குடும்ப மானம்தான் போகும், 

   

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.