“தெரியலை விக்ரமையும் நான் பார்க்கலை, அவன் 2 நாளா வேலைக்கும் வரலை, என்னாச்சின்னு தெரியலை, எனக்கே ஏகப்பட்ட பிரச்சனைகளா இதுல என்னால எதையும் சரியா கவனிக்க முடியலை. ஏதோ உன்னை இங்க விட்டது நல்லதா போச்சி. இல்லைன்னா இருக்கற பிரச்சனையில உன்னையும் என்னால நல்லா பார்த்துக்க முடியாம போயிடும்”
“சரி நான் வேணா ஆபிசுக்கு வந்து உங்களுக்கு துணையா வேலை செய்யவா”
“அப்படி சொல்றியா அப்ப சரி ஒண்ணு பண்ணு நீ தாஸ்கூட ஆபிஸ்க்கு போய் ப்ளான் வரைய ஆரம்பி நான் அந்த ஹாஸ்டல் கட்டறதுக்கு அந்த காலேஜ் ஓனர்கிட்ட போய் பேசிப்பார்க்கறேன். அவர் சரின்னு சொன்னா உடனே உன் ப்ளானை காட்டலாம், அது அவருக்கு பிடிச்சிருந்தா அடுத்த வாரத்திலிருந்து வேலையை ஆரம்பிக்கலாம் எப்படியாவது இந்த ஊர்ல நான் தலை நிமிர்ந்து நிக்கனும் அதுக்கு நீ எப்பவும் எனக்கு துணையா இருக்கனும்”
“கண்டிப்பா நான் இருப்பேன்.”
“விக்ரமை நினைச்சி நீ கவலைப்படாத, உன் கூட தாஸ் இருப்பான் கூடவே 2 ஆளுங்களையும் போடறேன், நீ இந்த வீட்ல இருக்கறவரைக்கும் பிரச்சனையில்லை வெளிய ஆபிஸ் வரும் போது, வெளிய போறப்ப எல்லாம் உன் கூட தாஸ் இருப்பான் பயப்படாத”
“சரி” என சொல்ல தேவா தாஸை பார்த்து சரியா என சொல்ல அவனும் சரி நான் பார்த்துக்கறேன் என தலையாட்டவும் நிம்மதியானான் தேவா
”தாமரை அப்ப நாங்க கிளம்பறோம், கீர்த்தனாவை பத்திரமா கொண்டு வந்து விடறது தாஸ் வேலை 5 மணிக்கெல்லாம் கொண்டாந்து விட்டுடுவான் நீ பயப்படாத”
“என் கவலை அவள் மேல இல்லை உன் மேலதான் உனக்குதான் இப்ப நிறைய பிரச்சனை”
Next episode pls