(Reading time: 24 - 48 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

   

புன்னகை மாறாமல் அவனிடம்

   

”என் நம்பிக்கையை கேலி செய்யாதீங்க குங்குமம் வைச்சி விடுங்க” என சொல்ல இது தினமும் நடப்பதுதானே என நினைத்தபடியே வெங்கடேசனும் அவளின் நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்துவிட்டு

   

”ஆனந்தி கவலைப்படாத எத்தனை வருஷம் ஆனாலும் சரி நமக்குன்னு குழந்தை பாக்கியம் இருந்தா நிச்சயம் பிறக்கும், இதுக்காக விரதம் இருக்கறது, கோயில் குளம்னு சுத்தறது, இதெல்லாம் தேவையா வீணா உன்னோட உடம்பை நீ கெடுத்துக்கிற இதனால உனக்கு ஏதாவது வந்துடப்போகுது”

   

”எனக்கு எதுவும் ஆகாதுங்க கல்யாணம் ஆகி 5 வருஷமாச்சி இன்னும் குழந்தையில்லை, அந்த ஏக்கத்தை விடவா எனக்கு ஏதாவது வந்துடப் போகுது”

   

”தேவையில்லாம கவலைப்படறதை நிறுத்து, கடவுள் இருக்காரு, நம்பிக்கை வை அதுக்காக பரிகாரம் செய்றது, விரதம் இருக்கறதுன்னு முட்டாள்தனமா இருக்காத இந்த மூடநம்பிக்கைகளை விட்டுடு ஆனந்தி” என சொல்ல அவளோ மென்மையாக சிரித்துவிட்டு

   

”காலையில நீங்க ஒரு சுப்ரபாதம் ஆரம்பிக்காதீங்க, போங்க போய் பால் பாக்கெட் கொண்டு வாங்க சுட சுட காபி போட்டு தரேன், உங்க கவலையெல்லாம் பறந்துடும்” என சொல்ல வெங்கடேசனோ

   

”உன்னை திருத்தவே முடியாது, என்னிக்குத்தான் நீ என் பேச்சை கேட்டிருக்க இன்னிக்கு கேட்கறதுக்கு” என சொல்லிக் கொண்டே வாசல் கதவிடம் சென்றான். அங்கு பால் பாக்கெட் வைக்கும் கூடை முன் ஆனந்த் நின்றுக் கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் முதலில் வியந்த வெங்கடேசன் எதுவும் பேசாமல் கூடையில் இருந்த பால் பாக்கெட்டை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றார்.

   

அவர் ஏதும் பேசாமல் சென்றது ஆனந்துக்கு புதிதல்ல அதனால் அவன் அமைதியாக 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.