(Reading time: 10 - 19 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

"அது அப்படி இல்லை வீணா! சஞ்சீவ் இந்துக்காக மாடில ஸ்பெஷலா நிறைய வேலை செஞ்சு வச்சிருக்கார். அவர் ரூமை ரீமாடல் செய்து, அங்கே புதுசா எக்ஸ்ட்ரா ரூம் எல்லாம் கட்டி, என்ன என்னவோ செஞ்சு வச்சிருக்கார்!!"

   

கீதா சொன்ன விபரம் இந்துவிற்கும் புதியது! தன் மன சஞ்சலத்தை மறந்து அவளும் தோழிகளின் பேச்சை கவனித்தாள்.

   

"ஏன் கீதா அக்கா என்னென்னவோன்னு சொல்றீங்க? என்னன்னு உங்களுக்கு தெரியாதா?" என வீணா கேட்க,

   

"ஹுஹும்! இல்ல வீணா! எனக்கு மட்டும் இல்ல, இங்கே வீட்டுல யாருக்கும் தெரியாது. சஞ்சீவே தான் எல்லா வேலையையும் சூப்பர்வைசிங்கும் செய்தார். அத்தையும் அவர் விருப்பம் போல இருக்கட்டும்னு ஃப்ரீயா விட்டுட்டாங்க," என்றாள் கீதா!

   

கீதா சொல்வதை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்த இந்துவை பார்த்த வீணா,

   

"இந்து, உனக்காக சஞ்சீவ் மினி வசந்த மாளிகை கட்டி வச்சிருக்கார் போலருக்கே! என்ஜாய் என்ஜாய்," என்றாள் கேலி மின்ன!

   

வீணா அதை சொன்ன விதத்தில் இந்துவின் முகத்தில் முதன் முறையாக நிஜமாகவே புன்னகை மலர்ந்தது. ஆனால் சஞ்சீவ் கட்டி இருப்பது வசந்த மாளிகை எல்லாம் இல்லை என்று அவளுக்கு தோன்றியது! அதைப் பற்றி அவள் தனக்குள் யோசித்துக் கொண்டிருக்க, கீதா,

   

"வசந்த மாளிகை மட்டுமா, பயங்கரமான மிஸ்ட்ரி மாளிகையும் தான்! அலங்காரம் செய்ய கூட யாருக்குமே அனுமதி இல்லை! ஒன்லி இந்து

{/f90filter}

மேடம் தான் அலவுட்னு சஞ்சீவ் தெளிவா சொல்லிட்டார்," என்றாள்!

   

அப்படி என்ன ரகசியம்? இது அவள் நினைத்துப் போலவே வேறு ஏதோ விஷயம் என்பது இந்துவிற்கு புரிந்தது!!

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.