(Reading time: 10 - 19 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

அவளை விரைவில் புரிந்துக் கொள்வான்!!!

   

இந்த எண்ணம் தோன்றிய உடனேயே, அப்புறம்... எல்லாஆஆஆஅம் சரியான பிறகு,  இந்த அறையை என்ன செய்வது என்ற கேள்வி இந்துவிற்கு எழுந்தது. ரொம்பவே முக்கியமான விஷயம் தான் என்று அவளின் எண்ண ஓட்டத்தை பற்றி அவளுக்கே சிரிப்பும் வந்தது!

   

பெட்டிகளில் இருந்த துணிகளை பொறுமையாக எடுத்து அங்கே இருந்த வார்ட்ரோபில் அடுக்கி வைத்து விட்டு, தூங்க சென்றாள் இந்து. தூக்கம் உடனே வரவில்லை. ஆனால் கடந்த சில நாட்கள் போல் மனதை அழுத்திய பாரமும் இல்லை. சஞ்சீவ் அன்று காலையில் கட்டிய தாலியை  கையில் மெல்ல தொட்டுப் பார்த்தாள். ஏனோ மெய் சிலிர்த்தது! சஞ்சீவைப் பற்றி யோசித்தப் படியே கண்களை மூடி தூங்க முயன்றாள்!

  

 🌼🌸❀✿🌷

   

தலையை மட்டும் அசைத்து விட்டு, ஒரு வார்த்தையும் பேசாமல் இந்து அறையின் உள்ளே சென்றது சஞ்சீவை என்னவோ செய்தது!

  

அவள் உள்ளே சென்றதும் அங்கிருந்து கேட்ட கதவு லாக் ஆகும் சத்தம் அவனை உண்மையாகவே திகைக்க வைத்தது!

   

அந்த அளவிற்கா அவன் மீது தவறான அபிப்ராயம் வைத்திருக்கிறாள்??!!!

  

அவனுக்கு வலிக்கவும் செய்தது கோபமும் வந்தது!

   

முன்பு போல இந்துவே அவனிடம் பேச முயற்சி செய்வாள், சமாதானம் ஏதாவது சொல்வாள் என்றெல்லாம் அவன் எதிர்பார்த்திருந்தான்!

  

இந்துவின் இந்த ‘ப்ளன்ட்’ ரியாக்ஷனை அவன

{/f90filter}

் எதிர்பார்த்திருக்கவில்லை!

  

குழப்பத்துடன் அதே இடத்தில் சில நிமிடங்கள் நின்றவன், பின், குழப்பம் குறையாமலே மறுப்பக்கம் இருந்த அவனின் அறைக் கதவை திறந்து உள்ளே சென்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.