(Reading time: 27 - 53 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

யாரையும் நிம்மதியா இருக்க விடமாட்டேன்” என அவள் கத்த தாஸ் அதைப் பார்த்து கோபத்தில் சரண்யாவிடம் வந்தான் 

   

”என்ன சொன்ன திரும்பச் சொல்லு” என அவன் சைகை செய்ய அவள் மீண்டும் சொன்னதை சொல்லவே அவளது கையை பிடித்து இழுத்துக் கொண்டே வெளியே வந்தான். வீட்டு ஹாலில் அனைவரும் இருக்கவே அங்கு வந்து சேர்ந்தவன் 

   

”நாங்க போறோம்” என சைகை செய்ய

   

”எங்கடா” என பாட்டி கோசலை கேட்க

   

தேவா

   

”என் வீட்டுக்குதான் இனிமே தாஸ் சரண்யா அங்கதான் இருக்கனும்” என சொல்ல கைலாசம் அதிர்ந்தார்

   

”பைத்தியமாடா நீ அந்த வீட்ல நீங்க இருங்க, இவங்க எதுக்கு வேணும்னா வேற வீட்ல தங்க வைக்கிறேன்”

   

“இல்லப்பா சரண்யாவை நம்பி தாஸை விட முடியாது அவள் இவனை கொன்னாலும் கொன்னுடுவா”

   

”அதுக்கில்லைடா இது சரியா வராது ஊர் தப்பா பேசும்” என சொல்ல தாஸ்

   

”நான் பார்த்துக்கறேன் நாங்க போறோம்” என சைகை செய்துவிட்டு பூபதியையும் ராஜமாணிக்கத்தையும் ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு சரண்யாவை இழுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்ல பூபதியோ தேவாவிடம்

   

”ஏம்பா மாப்பிள்ளை போறப்ப எங்களை ஒரு மாதிரியா பார்த்தாரே அதுக்கு என்ன அர்த்தம்”

   

என கேட்க அதற்கு கைலாசம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.