(Reading time: 27 - 53 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

நடந்துக்கறார்ன்னு நீங்க நம்பலை இப்பவாவது நம்பறீங்களா இல்லையா” என சரண்யா கேட்க தாஸ் பூம்பூம் மாடு போல ஆம் என தலையாட்டவே அவளுக்கு சந்தோஷம் தாங்க முடியாமல் போனது.

   

”நாம ஒண்ணா ஹாஸ்டல் கட்டலாம். நமக்குள்ள இனி யாருமே வேணாம்” என அவள் சொல்ல அவன் சிரித்து அவளது கன்னத்தை செல்லமாக தட்டிவிட அவள் சிரித்துவிட்டு

   

”நான் போய் ரெடியாகட்டுமா” என கேட்க அவன் சரியென சொல்லவே உடனே அவள் எழுந்தாள்

   

”ஹாஸ்டல் கட்டற இடத்தில நானே எல்லார்கிட்டயும் பேசிக்கறேன், நீங்க சூப்பர்வைசரா இருந்தா போதும்” என சொல்ல அதற்கு தாஸ் சரியென தலையாட்டிவிட்டு எழுந்துக் கொண்டான். அவள் அறைக்குள் சென்றவுடன் தலையில் அடித்துக் கொண்டு தேவாவிற்கு உடனே மெசேஜ் அனுப்பினான்.

   

”சரண்யா தன்னோட ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டா, நம்மளை பிரிக்க பார்க்கறா, அவளுக்கு துணையா இருக்கற மாதிரி நான் நடிக்கிறேன் நீயும் நடிச்சி வை என்னதான் செய்றாள்ன்னு பார்க்கறேன், அவளுக்கு நான் உன்னை பழிவாங்கினாதான் என்கூட வாழ்வா போல” என எழுதி அனுப்ப சில நொடிகள் கழித்து தேவாவிடம் இருந்து பதில் மெசேஜ் வந்தது

   

”எனக்கும் தெரியும் அதனாலதான் நானும் நடிச்சிட்டு வந்தேன், நீ நடத்துடா முதல்ல அவளை வீட்டுக்குள்ள இருக்க வை அவள் வெளிய போனா உன்னை எல்லா இடத்திலயும் மட்டம் தட்டி ஓரம்கட்டி ஒரு வழி பண்ணிடுவா பார்த்துக்க” என எழுதியிருக்கவும் குழம்பினான். சரண்யாவை தேடி அறைக்குள் செல்ல அவள் அழகாக மாடர்ன் ட்ரெசில் இருக்கவே 

   

”என்ன இது” என கேட்க

   

”நல்லாயிருக்கா நான் இப்படித்தான் போடுவேன். தேவாவுக்கு பிடிக்காதோன்னுதான் சேலை கட்டினேன்”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.