(Reading time: 27 - 53 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

“இது வேணாம் வேலை செய்யும் இடம் சரியில்லை, ஆட்கள் இருப்பார்கள்” என அவன் சைகை செய்ய

   

”இருந்தா இருக்கட்டுமே வாங்க போலாம்” என அவள் கூப்பிட அவனோ இந்த ட்ரஸ்ல அவளை கூட்டிட்டு போய் எல்லாருக்கும் பொருட்காட்சி காட்டக்கூடாது என நினைத்தவன் தேவா சொன்னது நினைவுக்கு வரவே அவளை இழுத்து தன்னிடம் அணைத்தான்

   

”அய்யோ என்ன இது காலையில வேலைக்குப் போலாம்” என அவள் சொல்ல அவனோ அவளது கன்னத்தில் முத்தம் வைக்கவும் அவனை தள்ளிவிட முயற்சி செய்தாள்

   

”இப்ப வேணாம் நைட் பார்த்துக்கலாம்” என சொல்லி விலகி நிற்க அவனோ நைட் தேவா இருப்பான், கீர்த்தனா இருப்பாள் என சைகை செய்துவிட்டு அறைக்கதவை சாத்தியவன் முதல் வேலையாக அவள் அணிந்திருந்த குட்டியான ட்ரஸை கழட்டிவிட்டு அவளுடன் இணைந்தான்.

   

மதியமானதும் சாப்பிட அமர்ந்தான் தாஸ்

   

சரண்யாவோ அவசரமாக சமைக்க முடியாமல் கஷ்டப்பட்டு தாஸின் முன் நின்றாள்

   

”என்னால சமைக்க முடியலை ஓட்டல்ல சாப்பிடலாமா அப்படியே ஹாஸ்டல் கட்டற இடத்துக்கு போய் வரலாம்” என சொல்ல தாஸோ சிரித்துக் கொண்டே அவளை அழைத்துக் கொண்டு கிச்சனுக்குச் சென்றவன் அவன் சமைக்கலானான்.

   

”உங்களுக்கு சமைக்கத் தெரியுமா” என கேட்க அவன் ஆம் என தலையாட்டவே அவன் வேகமாக சமைப்பதையே வேடிக்கைப் பார்க்கலானாள். 

   

அவள் தன்னை வேடிக்கை பார்ப்பதைக் கண்டவன் அவளது கையை பிடித்து தன்னுடன் இணைத்து அணைத்தவாறே சமையல் செய்ய அவளுக்கு அந்த நெருக்கம் மிகவும் பிடித்திருந்தாலும் இவை அனைத்தும் தேவாவிடமிருந்து தனக்கு கிடைக்கவில்லையே என ஒரு பக்கம் தோன்றினாலும் இன்னொரு பக்கம் ஹாஸ்டல் வேலை நிக்கறதே என 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.