(Reading time: 27 - 53 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

“கல்யாணம் ஆனதும் சரண்யா மாறியிருப்பா” அதற்கு பூபதி

   

“இல்லை இல்லை சரண்யா கர்ப்பமான விசயம் தேவா சொன்னான் கூடவே சரண்யா மேல சந்தேகமா இருக்குன்னு சொன்னான்”

   

“ஏன் என்ன சந்தேகம்” என தாத்தா சொல்ல

   

“இந்த 3 மாசமா தேவாவுக்கும் தாஸ்க்கும் சண்டை வர்ற மாதிரியே சரண்யா பல விசயங்களை செஞ்சாளாம், அதுக்காகவே கீர்த்தனாவை வேலைக்காரி போல பொழுதுக்கும் வீட்லயே இருக்க வைச்சாளாம், ஹாஸ்டல் கட்ட கூட சரண்யா வராததால கடைசியில தேவாவும் அவனோட அப்பாவும்தான் ஹாஸ்டல் கட்டிக்கிட்டு இருக்காங்களாம் கூடவே தேவா அவனோட வீட்டையும் கட்டிக்கிட்டு இருக்கானாம் ரெண்டு வேலையும் ரொம்ப கஷ்டமாயிருக்கு உதவி தேவைன்னு சொன்னான்.” என்றார் பூபதி

   

“தாஸ் உதவி செய்யலையா”

   

“அதான் புரியலை இந்த 3 மாசத்தில சரண்யா பேச்சை கேட்டு தாஸ் ஆடறான்னு தேவா சொன்னான். சில சமயம் தாஸ் சொல்றதை கேட்டு சரண்யா அடங்கியிருக்கறதாவும் சொல்றான், என்ன நடக்குதுன்னு தெரியலைப்பா இந்த குழந்தையை சரண்யா கலைக்காம இருந்தா போதும்னு தேவா சொன்னான்”

   

“ஏன்டா அவள் குழந்தையை கலைக்கனும்”

   

“காரணம் இருக்கு தாஸ் ஒரு ஊமை, பிறக்கற குழந்தை ஊமையா பொறந்துட்டா என்னாகிறதுன்னு சரண்யா யோசிச்சிருந்தா ஏன்னா அவள் இந்த 3 மாசமா எப்படியாவது அந்த வீட்டை விட்டு வெளியே வந்து இங்க நம்ம கூட சேர்ந்துக்கனும்னு அவ்ளோ ஆடியிருக்காளாம், தேவாவும் கீர்த்தனாவும் தாஸ்க்காக சரண்யா செய்றதை பொறுத்துக்கிட்டதா சொன்னாங்கப்பா”

   

“நீ சொல்றதும் சரிதான். ஒண்ணு பண்ணலாம் நீ கிளம்பி போ, தாஸையும் சரண்யாவையும் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.