(Reading time: 27 - 53 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

வீட்டை விட்டு போயிடலாம், நடந்த சண்டையை தாத்தாக்கிட்ட சொல்லி சொத்து மொத்தத்தையும் தன் பேருக்கு எழுதி வாங்கிட்டு தாஸை விரட்டலாம்னு நினைச்சிருக்கலாம்”

   

“உண்மையாவா”

   

“இல்லை இது என் யூகம்தான் ஏன்னா அவளுக்கு தாஸை பிடிக்காது ஆனாலும் அவனுக்கு இணக்கமான பொண்டாட்டியா வாழ்ந்தாள்னா என்ன அர்த்தம் அவள் மாறலை கீர்த்தனா, இப்ப பாரு கொஞ்ச நாளா நானும் தாஸும் அவள் முன்னாடி சண்டை போட்டு விரோதம் பண்ணிக்கறத நினைச்சி அவள் சந்தோஷப்பட்டா என்னவோ என்னை பழிவாங்க நினைச்சி உன்னை டார்ச்சர் பண்ணா, எனக்கும் யாரும் இருக்க கூடாது, 

   

தாஸ் அப்புறம் நீ இல்லாம நான் கஷ்டப்படனும்னு நினைச்சா, அதுக்காகவே உன்னை டார்ச்சர் பண்ணி நீயே இப்ப 1 வாரமா என் பாட்டிகிட்ட இருந்த, அது அவளுக்கு சந்தோஷம், அடுத்து தாஸை வைச்சி அவள் போட்ட திட்டத்தில நானே நீ இல்லாத ஒரு வாரத்தை நினைச்சி வெளிய தங்கவும் அவளுக்கு டபுள் சந்தோஷம், என்னவோ என்கிட்டயிருந்து எல்லாத்தையும் பறிச்சிட்ட மாதிரி பழிவாங்கிட்ட மாதிரி திருப்தியா போயிருக்கா இனி பாரு அவள் இங்க வரவே மாட்டா”

   

“அப்ப அந்த ஹாஸ்டல்”

   

“அதை அப்பா பார்த்துக்குவாரு நாம இனிமேலயவது நம்ம வீட்டை கட்டனும், தாஸே அப்பாவாயிட்டான் நானும் அப்பாவாகனும் எங்க இருந்த 3 மாசத்தில நிம்மதியில்லாம போச்சி, என்னதான் தாஸ் சரண்யாவுக்காக நடிச்சாலும் எனக்கு உள்ளுக்குள்ள வேதனையா இருந்திச்சி. இப்ப கூட பாரு தாஸ் சரண்யாவுக்காக சென்னைக்கு போகலை. இன்னும் அவள் இங்க இருந்தா நீயும் நானும் கஷ்டப்படுவோம்னு போயிட்டான். போறப்ப என்னை கட்டிப்பிடிச்சி அழுதான் பாரு அவனோட பாசம் அங்க தெரிஞ்சது.

   

என்னோடவே இத்தனை வருஷம் இருந்து முதல் முறையா எனக்காகவே நான் சந்தோஷமா வாழனும்ங்கறதுக்காகவே பிரிஞ்சி போறான். அவன் நல்லாயிருக்கனும், சரண்யாவும் மாறனும்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.