(Reading time: 27 - 53 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

இரவும் அதே போல ஆனது. அறையை விட்டு சரண்யாவை வெளியேற விடாமல் பார்த்துக் கொண்ட தாஸைக்கண்டு நொந்துப் போனாள் சரண்யா

   

”இவன் ஒருத்தன் என்னை விடவே மாட்டேங்கறானே, ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் முடிஞ்சாதான் என்னை ப்ரீயா விடுவான் போல சே குரங்கு கையில பூமாலை கிடைச்ச மாதிரி இவன் கையில நான் கிடைச்சேன் இவன் என்னை இப்படி போட்டு உயிரெடுக்கிறானே பொழுதுக்கும் இப்படி படுக்கையில இருந்தா என்னாகிறது கடைசியில நான் அம்மாவாயிடுவேன் போல இருக்கே இல்லை இல்லை கூடாது எப்படியிருந்தாலும் இவனோட குழந்தை எனக்கு வேணாம் அதுவும் இவனைப் போலவே ஊமையா பொறந்துட்டா எனக்கு கஷ்டம். எப்படியாவது இவன்ட்ட இருந்து விலகனும்” என நினைத்தாள் சரண்யா.

   

ஆனால் அவள் நினைத்தது ஒன்று கூட நடக்கவில்லை. நாட்கள் வேகமாகப் போனாலும் ஹாஸ்டல் வேலையை மறைமுகமாக தேவாவும் கைலாசமுமே செய்துக் கொண்டிருந்தார்கள். வீட்டிலேயே அடைப்பட்டு இருந்த சரண்யாவிற்கு அங்கு நடக்கும் எதுவும் தெரியாமல் போனது. 

   

தாஸ் சரண்யாவின் பக்கத்திலேயே இருந்தான், ஒரு அடிமையை போல அவளுக்கு தேவையானதை செய்து தனக்கு தேவையானதை அவளிடம் பெற்றுக் கொண்டும் இருந்தான். ஒரு கட்டத்தில் அவளுக்கு இவன் அடிமையா இல்லை அவனுக்கு இவள் அடிமையா என்ற குழப்பமே வந்தது. அந்த குழப்பத்திற்கு நடுவில் 3 மாதம் ஓடிவிட்ட நிலையில் சரண்யா கர்ப்பமானாள்.

   

அவள் தாயான செய்திக் கேட்டு முதலில் சந்தோஷப்பட்டது அவளின் தாத்தா ராஜமாணிக்கம்தான் ஆனால் பூபதியோ தன் தந்தையிடம்

   

”அப்பா எனக்கு சந்தேகமா இருக்கு, சரண்யாவும் தாஸும் கட்டாயமா கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க ஒருத்தரை ஒருத்தர் வெறுக்கறவங்க அப்படியிருக்கறப்ப எப்படி இந்த கர்ப்பம் எனக்குப் புரியலை” அதற்கு தாத்தாவோ

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.