(Reading time: 27 - 53 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

   

”இனிமே நான் பண்றதை பாருங்கன்னு அர்த்தம்”

   

”ஓஓஓ நல்லது நல்லது சரி சரி சரண்யா நல்லபடியா வாழ்ந்தா அதுவே போதும் எங்களுக்கு அப்புறம் என்ன நாங்களும் கிளம்பறோம்” என ராஜமாணிக்கம் எழுந்துக் கொள்ள கைலாசம் அவர்களை வழியனுப்பலானார்.

   

தேவாவும் கீர்த்தனாவை அழைத்துக் கொண்டு முதல் ஆளாக வீட்டுக்குச் சென்றான். தாஸ் சரண்யா வருவதற்குள் ஆரத்தி எடுக்க கீர்த்தனாவை ஏற்பாடு செய்து அவர்கள் வருவதற்காக தெருவில் நின்று காத்திருந்தாள். தேவாவும் காத்திருந்தான். ராஜமணிக்கம் மற்றும் பூபதி இருவரும் சேர்ந்து தாஸ் மற்றும் சரண்யாவுடன் வந்து இறங்கினார்கள்.

   

”தேவா நீதான் பொறுப்பு, உன்னை நம்பி விட்டுப் போறேன்” என பூபதி சொல்ல அதற்கு சரண்யாவோ

   

”என்னை என்னால பார்த்துக்க முடியும்பா, யாரோட உதவியும் எனக்குத் தேவையில்லை” என வெறுப்பாகச் சொல்ல தாஸ் அவளையே பார்த்தான்.

   

பூபதியோ

   

”நான் சொன்னது உனக்காக இல்லை தாஸ்க்காக, உனக்காக யாரும் இங்க கவலைப்படலை, இந்த திமிர் இந்த கர்வம்தான் உன்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டிருக்கு, ஆனாலும் நீ இன்னும் அடங்காம இருக்க பார்த்தியா அது தப்பு நீ கொஞ்சம் மாறனும்” என சொல்லிவிட்டு தன் தந்தையிடம்

   

”அப்பா நாம கிளம்பலாம் இனிமேல இங்க நின்னா நம்ம மரியாதையை இவளே காத்துல பறக்க விடுவா, வாங்க போலாம்” என சொல்ல தாத்தாவோ தேவாவிடம்

   

”ஏதாவது பிரச்சனை வர்ற மாதிரியிருந்தா உடனே தகவல் சொல்லுப்பா, நான் வந்துடறேன் தாஸ்க்காக நான் எதுவும் செய்ய தயாரா இருக்கேன்” என சொல்ல சரண்யாவோ

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.