Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 12 - சசிரேகா
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
இனி அந்த அறையில் யாருமேயில்லை. தில்லையும் சம்யுக்தா மட்டும்தான் இருந்தார்கள். வெளியே இருள் வந்துவிட்டது.
அதிலும் சம்யுக்தா கோபமாக நின்றுக் கொண்டிருந்தாள். அவளைக் கண்ட தில்லை அதிர்ந்தான்.
”ஓய் என்ன அப்படி பார்க்கற, மதுரையில ஒரு கண்ணகிதானே இருந்தாங்க நீ என்ன அவங்களோட அடுத்த வாரிசா, கையில தாலியோட வந்து நிக்கற என்ன விசயம் அதான் எல்லாம் சொல்லிட்டேனே, என் முன்னாடி நிக்கறதுக்கு பதிலா போ போய் உன் அப்பன் முன்னாடி நில்லு”
”எனக்கு நியாயம் கிடைக்காம நான் இங்கிருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்க மாட்டேன்”
”நியாயமா எதுக்கு” என ஆச்சர்யமாக கேட்டான் தில்லை
”நீ எனக்கு செஞ்ச அநியாயத்துக்கு நியாயம் வேணும்”
“எதைச் சொல்ற ஓ கல்யாணம் நின்னதுக்கா, அதுக்கு நீ சந்தோஷப்படனும் அந்த டாக்டர் நல்லவன் இல்லை புரிஞ்சிக்க”
“நீயே ஒரு கெட்டவன், இன்னொருத்தரைப் பத்தி தப்பு சொல்ல உனக்கென்ன தகுதியிருக்கு, ஒரு டாக்டரை பத்தி குறை சொல்ற, படிச்சவனா நீ, உன்னைப் பார்த்தா அப்படி தெரியலை, ரௌடீயிசம் பண்றவன்தானே நீ, உன் புத்திக்கு வேற என்ன தெரியும், இதப்பாரு உண்மையை சொல்லு எங்கப்பாவோட தொழில் எதிரியா நீ”
”ஆஆஆ அடேங்கப்பா உங்கப்பா பெரிய மாஃபியா கும்பல் தலைவரு, அவருக்கு நான் எதிரியாயிட்டேன் இருக்கறதே ஒரு ஜவுளிக்கடைதானே இதுக்கு எவன் எதிரியா வருவான், நீ ஒண்ணு நான் உனக்காகத்தான் இந்த கல்யாணத்தை நிறுத்தினேன் நீ வேணா அந்த டாக்டரை பத்தி விசாரி, அப்ப உண்மை தெரியும் என்னை நம்பு”
”உன்னை நான் நம்பனுமா, உன்னை முதல் நாள் பார்த்தப்பவே எவனோ ஒருத்தனை