(Reading time: 12 - 23 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

”நீயே பொய்யான ஆதாரத்தை உருவாக்குவ உன்னால முடியாதா என்ன”

   

“நான் உண்மையை சொன்னாலும் நீ புரிஞ்சிக்கலைன்னா நான் என்ன சொல்றதுன்னு தெரியலை”

   

”என் அப்பா மேல இருக்கற நம்பிக்கையில மாப்பிள்ளை முகத்தை கூட பார்க்காம நான் இந்த கல்யாணத்துக்கு சரின்னு சொன்னேன் தெரியுமா, கல்யாண மேடையிலதான் அவர் முகத்தையே நான் பார்த்தேன், அதுவும் ஒரு நொடி கூட இருக்காது அதுக்குள்ள இந்த கல்யாணமே வேணாம்னு அவரை மிரட்டி சொல்ல வைச்சிருக்க, அதுல அவரும் பயந்து கல்யாணம் வேணாம்னு ஓடியிருக்காரு இதான் உண்மை, இப்ப நீ பொய் சொன்னதும் உடனே அது உண்மைன்னு நான் நம்பிடனுமா நீ என்ன கடவுளா”

   

”ஆமாம் நான் கடவுள்தான்” என சொல்ல அதைக் கேட்டு அவளுக்கு வெறுப்பே வந்தது.

   

”இப்படி சொல்ல உனக்கு அசிங்கமா இல்லை, என் வாழ்க்கையை அழிச்சிட்டு எங்கப்பாவை படுத்த படுக்கையா ஆக்கிட்டு, நல்லவன் மாதிரி பேசறியே நீ நல்லாவேயிருக்க மாட்ட, நாசமாதான் போயிடுவ“

   

”சரி சாபம் விட்டாச்சா கிளம்பு உன் சாபம் பலிச்சி நான் நாசமாவே போறேன் போ கீழே உன் கார் இருக்கு அதுல ஏறிப் போ”

   

”முடியாது எனக்கான நியாயம் கிடைக்கறவரைக்கும் நான் இங்கிருந்து போக மாட்டேன்” என கையில் இருந்த தாலியை அவனின் முன்பு காட்டினாள். அதைக் கண்டு திகைத்தவன்

   

”அதான் சாரி சொல்லிட்டேனே வேற என்ன சொல்லனும்னு நீ எதிர்பார்க்கற, தாலியை காட்டி பயமுறுத்தப் பார்க்கறியா, எனக்கு இந்த சென்ட்மென்ட் மேல எல்லாம் நம்பிக்கை கிடையாது, எனக்கு மானம் அவமானம் எல்லாம் கிடையாது, நீ எவ்ளோ நேரம் திட்டினாலும் எனக்கு சூடு சுரணையே வராது, போதுமா, இதப்பாரு இப்படியே திட்டிக்கிட்டு இருக்காத, என்னால நிம்மதியா கூட சாப்பிட முடியலை கொஞ்சம் அமைதியாதான் பேசேன், இது அடுக்குமாடி குடியிருப்பு, அவங்கவங்க குடும்பமா சந்தோஷமா இருப்பாங்க நீ கத்தறது அவங்களுக்கு தொல்லையா 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.