”இதப்பாரு இதைவிட வேற ஏதாவது சொல்லு, நான் செய்றேன் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது”
”வேறயா வேறன்னா என்ன அதை நீயே சொல்லு, எதை செஞ்சி எனக்கான நியாயத்தை நீ வழங்கறேன்னு நானும் பார்க்கறேன்”
”என்ன செய்றது, எனக்குத் தெரியலையே வேணா உனக்கு வேற மாப்பிள்ளை பார்த்து நான் கல்யாணம் பண்ணி வைக்கட்டுமா“
”அதை நீ செய்யாத, என் அப்பாவே செய்வாரு, முதல்ல நீ எனக்கான நியாயத்தை சொல்லு போதும்”
”அதுக்குதான் துப்பாக்கி தரேன் எடுத்து என்னை சுட்டுக் கொல்லுங்கறேன் நீதான் வேணாம்ங்கறியே“
”அதுக்கான பதிலையும் நான் சொல்லிட்டேன், என் கையால செத்து நீ புண்ணியவானா ஆக கூடாது, உன்னை நான் கொல்ல மாட்டேன், அதுக்காக உன்னை நான் விடவும் மாட்டேன், எனக்கான நியாயத்தை நீ தந்தே ஆகனும்” என்றாள் பிடிவாதமாக
அவனோ
”இதப்பாரு நானே ரொம்ப கஷ்டத்தில இருக்கேன், நீ வேற என்னை டார்ச்சர் பண்ணாத”
”நீ கஷ்டத்தில இருக்கியா, உன்னால மத்தவங்கதான் கஷ்டத்தில இருக்காங்க, நீயே பெரிய தாதா ஆனா, நீ இப்படி சாதாரணமா இருக்க, எதுக்கு? யாரும் உன் மேல சந்தேகப்படக் கூடாதுன்னுதானே, போலீசுக்கு பயந்து மறைஞ்சி வாழற நீயெல்லாம் என்னை மிரட்டக் கூடாது புரியுதா, உன் கஷ்டத்தை விட என் கஷ்டம்தான் பெரிசு”
”ஷ் யப்பா என்ன கஷ்டம் வந்துச்சி உனக்கு சொல்லு, மதுரையில இருந்து நீ பாட்டுக்கு யார்கிட்டயும் சொல்லாம கிளம்பி வர்ற, உனக்கு இருக்கற தைரியம் எனக்கு இல்லை, என்னால