(Reading time: 12 - 23 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

இருக்கும், அமைதியா பேசு திட்டு நான் கேட்டுக்கறேன்”

   

”ச்சீய் உன்னை ஏன்தான் அந்த கடவுள் படைச்சாரோ”

   

”அதை அவரைதான் போய் கேட்கனும்”

   

”உனக்கு சாவு எப்ப வரும்“

   

”வரும் போது வரட்டுமே இப்ப எதுக்கு நீ அவசரப்படற, நான் செத்தா நீ சந்தோஷப்படுவியா என்ன“

   

”ஆமாம் உன்னால எங்க குடும்பத்துக்கு நடந்த அநீதிக்கு நீ செத்தாதான் சரியாயிருக்கும்”

   

”ஓஹோ இதான் நீ கேட்கற நியாயமா, சரிம்மா சரி இரு வரேன்” என அவசரமாக கைகழுவிவிட்டு எழுந்து நின்றவன் அங்கு சுவரில் இருந்த அலமாரியைத் திறந்து அதில் இருந்த ஒரு கைதுப்பாக்கியை அவளின் முன் சுடுவது போல் காட்டினான். அவளோ பயமில்லாமல் நின்றாள் அதைக் கண்டு

   

”பயமாயில்லையா உனக்கு சுட்டேன்னு வை தலை சிதறிடும் நீ செத்துடுவ“

   

”ஏற்கனவே என்னை உசுரோட கொன்னுட்டியே போதலையா அது உனக்கு” என கேட்க அவனோ அவளின் விரக்தியைக் கண்டு நொந்தபடியே தனது கையில் இருந்த துப்பாக்கியை அவளிடம் நீட்டினான்

   

”வாங்கிக்க வாங்கி என்னை சுட்டுக் கொல்லு, கொன்னுட்டா உனக்கான நியாயம் கிடைச்சிடும்ல”

   

”உனக்கு சாவு ஏற்கனவே எழுதி வைச்சிட்டாங்க, நான் நல்லவள் என் கையால நீ செத்து உனக்கு புண்ணியம் வரக்கூடாது, உன்னோட சாவு பயங்கரமாதான் இருக்கனும் வாழனும்னு நீ ஆசைப்படறப்ப சாவு வரனும், நாய்ச் சாவுன்னு சொல்வாங்களே அது போல உனக்கு சாவு வரனும்” என சபித்தாள் அதைக் கேட்டுச் சிரித்தான்

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.