கொன்னுட்டு வந்து ஒண்ணும் தெரியாதவன் போல நான் கொடுத்த கேக்கை சாப்பிட்டவன்தானே நீ”
“ஆமாம் ஒருத்தனை கொன்னுட்டு நான் தப்பிச்சி ஓடிவந்தப்ப உன் மேல மோதினேன், ஓடிவந்த களைப்பில நீ கொடுத்த கேக்கை சாப்பிட்டேன், நானா வந்து உன்கிட்ட கேட்டேன் கேக் கொடுன்னு இல்லை பத்திரிகை கொடுன்னு நீயாதானே தந்த”
“தப்புதான், அன்னிக்கே உன்னை போலீஸ்கிட்ட மாட்டிவிட்டிருக்கனும் அதை விட்டுட்டு உன்னை காப்பாத்தினதுக்கு எனக்கு இப்படியொரு துரோகத்தை செஞ்சிட்டியே துரோகி” என திட்ட அவனுக்கு கோபமே வந்தது ஆனாலும் பொறுத்துக் கொண்டான்.
திடீரென திருமணம் நின்றதால் அவளின் பாதிப்பு அவனுக்கு புரிந்துவிட்டது. அவளின் தந்தை வேறு ஆஸ்பிட்டலில் இருப்பதால் இவ்வாறு கோபத்துடன் பேசுகிறாள் என நினைத்தவன் அவளிடம்
”துரோகின்னு சொல்லாத, வேற என்ன வேணும்னாலும் சொல்லிக்க எனக்கு கவலையில்லை, அப்புறம் உனக்கு நடந்த அநியாயத்துக்கு நான் மன்னிப்பு கேட்கறேன் சாரி மன்னிச்சிடு போதுமா” என சொல்ல அவளோ இளப்பமாகச் சிரித்தாள்
”நீ செஞ்ச காரியத்துக்கு சாரி சொன்னா எல்லாம் முடிஞ்சிப் போச்சா, எங்களை எல்லாரும் தரக்குறைவா பேசினாங்க, கிண்டல் பண்ணாங்க, இளப்பமா சிரிச்சாங்க எங்க மானமே போச்சி, அதை உன்னால திருப்பித் தர முடியுமா”
”நீ மட்டும் அந்த டாக்டரை கல்யாணம் பண்ணியிருந்தா, உன்கிட்டயிருக்கற எல்லாமே போயிருக்கும் மானத்தையும் சேர்த்துதான் சொல்றேன் அப்ப நீ என்ன செய்திருப்ப“
”நீ சொல்றதையெல்லாம் கேட்கறதுக்கு நான் ஒண்ணும் நீ வைச்ச ஆள் இல்லை, நீ சொல்ற பொய்யை யார் நம்பறாங்களோ அவங்ககிட்ட சொல்லு என்கிட்ட வேணாம்”
”சரிம்மா தாயே அந்த டாக்டர் மோசவன்ங்கறதுக்கான ஆதாரம் காட்டிட்டா அப்ப ஒத்துக்குவியா”