(Reading time: 12 - 23 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

”இந்த இடமே என்னோடது, இங்கிருக்கற ஒவ்வொரு போர்ஷன்லயும் என் ஆளுங்க இருக்காங்க, கிட்டதட்ட இந்த ஒரு அடுக்குமாடியிலயே 20 குடும்பங்கள் இருக்கு வீட்டுக்கு ஒருத்தன்னு என் ஆளுங்கன்னு 20 பேர் இருக்கானுங்க, யாருக்கும் சந்தேகம் வரக்கூடாதுன்னு அடியாளுங்களோட சேர்த்து அவங்க குடும்பத்தையும் இங்க தங்க வைச்சி பார்த்துக்கிறேன், இதுவரைக்கும் போலீஸ் கூட இந்த இடத்தை சந்தேகப்படலை தெரியுமா, இங்கிருக்கற ஆளுங்களைத் தாண்டி ஊருக்குள்ளயும் எனக்கு நிறைய ஆளுங்க இருக்கானுங்க, 

   

நான் வெளியே போனா எனக்கு பாதுகாப்பு தர்றதுக்கே 20 பேர் என்னை சுத்தி இருப்பானுங்க, இவங்களைத் தாண்டி எனக்கு சாவு வருமா என்ன, முதல்ல உன்னால உசுரோட இந்த இடத்தை விட்டு போக முடியுமா, யோசிச்சியா நீ, உன்னை இங்கிருக்கற எல்லாருக்கும் தெரியும், நான்தான் சொல்லி வைச்சேன் உன் டிரைவரை பத்தி கவலைப்படாத, அவனையும் ஒரு இடத்தில அடைச்சி வைச்சி சாப்பாடு போடச் சொல்லிட்டேன், நீ கிளம்பறதாயிருந்தா சொல்லு டிரைவரை உன்கூட அனுப்பி வைக்கிறேன், நேரா உன் ஊருக்கு போ இல்லை நியாயம் அது இதுன்னு இங்க நீ நின்ன, உன் உயிருக்கு நான் உத்தரவாதம் தரமுடியாது, என்னோட விசுவாசிங்க உன்னை என்ன வேணும்னாலும் செய்வாங்க பரவாயில்லையா” என கேட்க அவளோ மிரளவில்லை துணிச்சலாக அவனையே நேருக்கு நேராகப் பார்த்தாள்.

   

அவளின் அந்த பார்வையில் தில்லை ஒரு நொடி தடுமாறினான். ஆனாலும் அதை அவள் தெரிந்துக் கொள்ளாமல் போனாள்.

   

”உன்கிட்ட நான் மன்னிப்பு கேட்டேன் வேற என்ன செய்யனுங்கற”

   

“எனக்கு நீ நியாயம் வழங்கித்தான் ஆகனும்”

   

”அதான் எப்படி“

   

”உன்னால என் கல்யாணம் நின்னுடுச்சி, என்னை எல்லாரும் கேவலமா பேசிட்டாங்க, என் அப்பாவோட நிலைமையும் மோசமாயிருக்கு, எங்க சொந்த பந்தம் கூட எங்களை  இளக்காரமா பார்த்தாங்க, எங்க மானம் போயிடுச்சி நீதான் எங்க மானத்தை திருப்பித்தரனும் வா வந்து எல்லார் முன்னாடியும் நின்னு மன்னிப்புக் கேளு, உன்னாலதான் இந்தக் கல்யாணம் நின்னதா 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.