சொல்லு, என் அப்பாகிட்ட மன்னிப்பு கேளு, அந்த டாக்டர் மாப்பிள்ளையை மிரட்டினல்ல, அவர்கிட்டயும் வந்து மன்னிப்பு கேளு, ஊருக்கு முன்னாடி நீ மன்னிப்பு கேட்டாதான் நீ எனக்கு செஞ்ச அநியாயத்துக்கு நியாயம் கிடைச்ச மாதிரியிருக்கும் வா வந்து மன்னிப்பு சொல்லு வா” என அழைக்க அவனோ கலகலவெனச் சிரித்தான். அவன் சிரிப்பதை குழப்பமாக பார்த்தாள் சம்யுக்தா
”நானா இதப்பாரு என்னால சிதம்பரத்தை தாண்டி வரமுடியாது ஆனா, நான் எதுக்கு ஊருக்கு முன்னாடி மன்னிப்புக் கேட்கனும், என்னால நீ பாதிக்கப்பட்ட, அதனால உன்கிட்ட மன்னிப்பு கேட்கறேன் உன் அப்பாவுக்கு அப்படி ஆனதுக்கு பதிலாதான் என் ஆளை வைச்சி ஆப்ரேஷன் அதுவும் இலவசமா செய்ய வைச்சிட்டேன், ஆஸ்பிட்டல் பில் கூட என் பொறுப்புதான் மன்னிப்புக்கு பதிலா உன் அப்பா உயிரை காப்பாத்திட்டேன்
வேற அந்த டாக்டர் மாப்பிள்ளைக்கிட்ட நான் மன்னிப்பு கேட்கனுமா அதுக்கு வேற ஆளைப்பாரு, அவனே மோசமானவன்னு சொல்றேன், அவன்கிட்ட போய் மன்னிப்பு கேட்கச் சொல்ற என்னால முடியாது, நீயும் உன் அப்பா அம்மாவும் நல்லவங்கன்னு தெரிஞ்சிருந்தும் உங்களை அவமானப்படுத்தின ஊரை நீதான் வெறுக்கனும், அவங்க இளப்பமா பேசினா அது அவங்க தப்பு, ஏன் அவங்களுக்கு தெரியாதா நீங்க யார் எப்படிபட்டவங்கன்னு அவங்க கேவலமா பேசிட்டாங்களாம் அதுக்காக நான் போய் சாரி கேட்கனுமா என்னால முடியாது, நான் யார்கிட்டயும் சாரி கேட்க மாட்டேன்
உனக்கு நடந்த அநியாயத்துக்கு நான் பொறுப்பில்லை, என்னைப் பொருத்தவரைக்கும் நான் உனக்கு நல்லதுதான் செஞ்சேன், ஏதோ போனா போகட்டும்னு நான் உனக்கு சாரி சொன்னேன், அதுவும் என்னைத் தேடி நீ இவ்ளோ தூரம் வந்து நியாயம் கேட்டதால, உன்னோட தைரியத்தை மெச்சி மன்னிப்பு கேட்டேன் இதுவே அதிகம், இதோட போயிடு இதுக்கு மேல என்கிட்ட இருந்து உன்னால எதையும் எதிர்பார்க்க முடியாது, நானும் செய்ய மாட்டேன், உனக்கு வேண்டிய நியாயத்தை நான் கொடுத்துட்டேன் கிளம்பு கிளம்பு” என சொல்ல அவளோ மறுத்தாள்
”இல்லை எனக்கான சரியான நியாயத்தை நீ கொடுத்துதான் ஆகனும் அதுவரைக்கும் உன்னை விட்டு நான் போக மாட்டேன்” என சொல்லியதோடு கோபமாக நின்றாள். அதைக் கண்டவன் நொந்துப் போனான்