(Reading time: 21 - 42 minutes)

பிறகு இரண்டொருவர் டான்ஸ் ஆடினார்கள். ஜெனி, அனு, ஆரு மூவரும் 'அன்பென்ற மழையிலே' பாடலை பாட எல்லோரும் கைத்தட்டி ஆராவரித்தார்கள்.

கடைசியாக சின்ன சின்ன ராகிங் செய்தார்கள். உதாரணதிற்கு, ஒரு 15 அடி ஸ்கேலை கொடுத்து அந்த ஹாலை 2 நிமிடத்திற்குள் அளந்து வர வேண்டும் என்றார்கள். (என்னைய காலேஜ்ல சீனியர்ஸ் இதன்பா பண்ணச் சொன்னாங்க).

அப்புறம் சின்ன சின்னதாய் டீ, காபி விற்பது, நிர்மலா ஜெயராம் மாதிரி ந்யூஸ் வாசிப்பது என பல பல ராகிங் பண்ணி, கடைசியாக college-ல் எந்த எந்த prof. strict, யார் யார் friendly, யாரிடம் எப்படி பேச வேண்டும் என சில டிப்ஸ் எல்லாம் கொடுத்தார்கள்.

ல்லாம் முடிந்து ஜெனியிடம் bye சொல்லிவிட்டு hostelக்கு வரும்போது இருட்டிவிட்டது. நேராக நந்துவின் ரூமிற்கு சென்ற அனுவும் ஆருவும் நந்து dress-ஐ கூட மாட்றாமல் அப்படியே அமர்ந்திருக்கவும், பதறிப் போய் அவளிடம்

"என்னாச்சுடா.. தலை ரொம்ப வலிக்குதா?" ஆரு

"அந்த கொசு சொன்னதைக் கேட்டிருக்க கூடாது... இவ்வளோ நேரம் வராதப்பவே நாம வந்து பாத்திருக்கனும் ஆரு..." என்று அனு கவினை வசை பாட,

கவின் என்றதும் திருதிருவென்று முழித்த நந்து, அவன் அவர்களிடம் எதுவும் கூறினானா என்று தெரியவில்லையே.. இவர்களிடம் சொல்வதா வேண்டாமா என்று நினைத்தவள், வேண்டாம்... சொன்னால் பயந்து விடுவார்கள் என்று தானாய் முடிவு செய்துகொண்டு

"இல்ல இல்ல.. ஒன்னும் இல்ல. சும்மா கொஞ்ச நேரம் படுக்கலாம்னு வந்தேன்.. அப்படியே தூங்கிட்டேன்.." என்று தந்தியடிக்க..

"அப்படியா..?" என்று அனு நம்பாமல் கேட்க, நந்து பதில் சொல்ல வார்த்தையை தேடிக் கொண்டிருக்கும் பொழுது, தடாலடியாய் கதவை திறந்தபடி உள்ளே நுழைந்த ஒரு பெண் ஆருவின் முன்னாடி வந்து..

"ஏய்.. உன் மனசுல என்ன பெரிய அழகின்னு நெனப்பா.. ஒருத்தன் வேலை வெட்டி எல்லாத்தையும் விட்டுட்டு உன் பின்னாடி சுத்துறதே கதின்னு கிடக்கான்.. நீ என்னவோ பெரிய ரதி மாதிரி அவன கண்டுக்காம போற..?" என்றாள்.

ஆரு "என்ன சொல்றீங்க..? என்று கேட்க

"ஒன்னுமே தெரியாத மாதிரி கேட்குறத பாரு.. வின்சென்ட் பத்தி தான் சொல்றேன்.. எப்படி படிப்பான், active-ஆஇருப்பான் தெரியுமா? இப்போ examக்கூட வர்றதே இல்ல, எந்த function-லயும் participate பண்றதும் இல்ல.. எல்லாம் உன்னாலதான்.." என்று பாய,

அப்போதுதான் முன்பொருநாள் class-க்கு வின்சியுடன் வந்தவள், அவள் வின்சியோட friend என்பது ஞாபகம் வந்தது.

அனு இடைபுகுந்து கோபத்துடன்.

"இன்ன விஷயம்னு புரியாமல் சும்மா பேசாதீங்க..!" என்றாள்.

"என்ன பெரிய விஷயம்.....இங்க பாரு.. ஒன்னு ஆமான்னு சொல்லு, இல்ல இல்லைனு சொல்லு. எதுவுமே இல்லாமல் அவனை ஏன் இப்படி படுத்தற.." என்றவளின் முகத்தில் மிதமிஞ்சிய கோபமும், கொஞ்சம் பொறாமையும் மின்னியதை பார்த்த ஆரு அமைதியுடன்,

"உங்களுக்கு அவன் மேல் விருப்பம் இருந்தால், அவன்கிட்ட போய் சொல்லுங்க.. எனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல" என்றாள்.

அவள் பதிலைக் கேட்டு சற்று தடுமாறிப்போனவள்

"எ.. எ.. என்னப் பத்தி நீ ஒன்னும் கவலைப்பட வேணாம்.. என்ன பண்றதுன்னு எனக்கு தெரியும்.. உனக்கு அவன் மேல கொஞ்சமாது அக்கறை இருந்தா அவன்கிட்ட பேசி அவனை சரியாக்கு.." என்றுவிட்டு வேகமாக சென்றுவிட்டாள்.

னு "என்ன ஆரு..?" என்று கேட்க

"என்ன.... என்ன ஆரு.. எனக்குன்னு கொஞ்சமாவது சுயமரியாதை இருக்குன்னு நினைக்கிறேன்.. அது தப்பா?" என்று கேட்டவளின் உதடு துடித்தது. அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் கைகளால் முகத்தை மூடியபடி அழுதாள்.

"ஷ்... ஆரு.." என்று நந்துவும், அனுவும் அவளை தேற்ற முயல அப்போது உள்ளே வந்த தீப்தி, அவர்களைப் பார்த்து  "ப்ச்.." என்று முகத்தை சுழித்துவிட்டு, விறுவிறுவென்று வெளியே சென்றாள். கோபத்துடன் பல்லைக் கடித்த அனுவை சமாதானப் படுத்தி

"உங்க ரூமுக்கு போகலாம்.." என்றாள் நந்து.

அவர்கள் room-ற்கு சென்று ஆரு கொஞ்சம் அமைதியானதும், அவள் அருகில் அமர்ந்த நந்து, ஆருவின் கைகளை பிடித்தபடி

"விடு ஆரு.. எல்லாம் சரியாயிரும்... ஆனா அந்த சீனியர் சொல்றதைப் பார்த்தா அவரும் ரொம்ப கஷ்டப்படுற மாதிரி தெரியுது.. என்ன பிரச்சனை ஆரூ? திரும்ப சொல்றது கஷ்டமா இருந்தா வேண்டாம். ஆனா உனக்கு தெரியாத இன்னொரு பக்கம் இருக்கலாம் இல்லயா.. அதான் கேட்கிறான்.." என்றாள் மெதுவாக.

அவளையே பார்த்த ஆரு,

"உனக்கு தெரியாத விஷயம் எதுவும் இருக்க வேண்டாம்கிறதுனால மட்டும்தான் இதை சொல்றேன். நான் சொல்றது இதுவே கடைசி தடவையா இருக்கட்டும். இனிமே இத பத்தி நான் நெனச்சு பார்க்க கூட விரும்பல.." என்று அவள் சொல்லும் போதே, அந்த விஷயம் அவளுக்கு எவ்வளவு வேதனையாக இருக்கிறது என்று தெரிந்தது. ஆனால் அவள் வாய்மொழியால் கேட்டால் தான் அவள் மனதில் என்ன உள்ளதென்பது தெரிய வரும் என்பதால், அனுவும் நந்துவும் மௌனமாக கேட்டுக்கொண்டார்கள்.

 (கமான்.. எல்லாரும் டார்டாய்ஸ் கொசுவர்த்தியை சுத்துங்க.. டொய்ங் @)

வின்சென்டோட அப்பாவும், எங்க அப்பா, சித்தப்பாவும் சின்ன வயதிலிருந்தே family friends. பிசினஸ் கூட சேர்ந்து தான் பண்றாங்க. எங்க வீட்டுல பசங்க இல்லாததால அவன் ரொம்ப செல்லம். எப்பவும் எங்க கூட தான் இருப்பான். ரெண்டு வருஷம் முன்னாடி வரை அவன் தான் எங்க பெஸ்ட் friend.

அனுகிட்ட சொல்ல முடியாத விஷயத்தை கூட அவன் கிட்ட தான் share பண்ணிப்பேன். அவனும் கரெக்ட்டா அட்வைஸ் பண்ணுவான்.

ஆனா ரெண்டு வருஷமா அவன் பார்வை கொஞ்சம் மாறின மாதிரி தெரிஞ்சிது. அப்ப எனக்கு எதுவும் வித்தியாசமே தெரியல.

அவன் first year வேலூர்ல ஒரு காலேஜ்ல படிச்சான்.. ஆனா எப்போ discontinue பண்ணிட்டு இங்க சேர்ந்தான்னு தெரியல.போன வருஷ birthday party-க்கு அவனோட காலேஜ் friends எல்லோரும் வந்திருந்தாங்க.அன்னிக்கு.....

பிறகு நடந்தவை எல்லாம் ஆருவின் மனதில் படமாக ஒடியது........

பிறந்த நாள் அன்று, சீக்கிரமே வந்து தன் புது நண்பர்களை சந்திக்க வேண்டும் என்று வின்சி ஆருவை மிகவும் கேட்டுக் கொண்டதால், அவளும் எல்லோர்க்கும் முன்னாடியே அங்கு சென்றாள். ஹாலின் உள்ளே சத்தம் கேட்க, திறந்து உள்ளே நுழைந்தாள். ஒரே இருட்டாக இருந்தது.

 இருட்டில் இரு கைகள் அவளை வாரி அனைத்து சட்டென்று அவள் இதழில் இதழ் பொருத்தியது. அதே நேரத்தில் லைட் எல்லாம் ஏறிய, அவர்களை சுற்றி வின்சியின் நண்பர்கள் நின்று ஆரவாரித்தனர். அவள் அவனை தள்ள முற்படும் முன்னே, அவன் உடல் அதிர அவளை விட்டு விலகி, அவளை பார்த்து (இன்ப) அதிர்ச்சியில் நின்றான். சட்டென்று இடம் அமைதியாக, ஒருவன் மட்டும்,

"மாப்ள, நெனச்ச birthday gift கெடச்சிருச்சு போல.. நெனச்சத சாதிச்சிட்டியேடா.." என்று சொல்ல,

இன்ப அதிர்ச்சியில் இருந்த அவன்,

"வாய மூடுடா.." என்று சொன்ன விதத்தில் கொஞ்சம் கூட கோபம் இல்லை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.