(Reading time: 21 - 42 minutes)

வன் சொல்வதைக் கேட்க கேட்க, நளினிக்கு தலையை சுற்றியது.

'இவன் ஒரு பெண்ணைப் பற்றி இவ்வளவு உயர்வாக பேசுகிறானே என்று மகிழ முடியாமல், தன் அண்ணனுக்கு தான் கொடுத்த வாக்கு தடுத்தது. இவன் என்ன சொல்ல வருகிறான்.. அவளைப் பிடித்து விட்டது என்கிறானா.. இல்லை பிடிக்குதான்னு நம்மளைக் கேட்கிறானா, ஒன்றும் புரியவில்லை. நந்துவை நினைக்கையில் பயம் குப்பென்று நெஞ்சை அடைத்தது. இதை பொறுமையாகத்தான் கையால வேண்டும் என்று முடிவெடுத்தவர்

"பிரபு கண்ணா.. ஒரு பெண்ணை நல்ல விதமா நினைக்கிறது தப்பில்லமா. எல்லா பொண்ணுங்களும் மோசமா இருக்க மாட்டாங்க.. ஒரு சிலர் தான் அப்படி.." என்று அவர் முடிக்கும் முன்பே

"இல்லை பொண்ணுங்களோட குணமே அப்படித்தான்.. சுயநலப் பிசாசுங்க.." என்று சூடுபறக்க பொரிந்து தள்ளியவனை கோபமாகப் பார்த்து கண்டிப்புடன்,

"தப்பு பிரபு.. நான் கூட ஒரு பொண்ணுதான், அப்போ நானும் சுயநல பிசாசா? இல்லை இப்போ பக்கம் பக்கமா பேசினியே உன்னோட தே.. வ.. தை.. அவள் கூட பிசாசா...?" என்று கேட்டார், தொடர்ந்து,

"உன்கிட்ட நிறைய தடவை சொல்லிட்டேன்.. மனுசங்கன்னா நல்லவங்களும் இருப்பாங்க கெட்டவங்களும் இருப்பாங்க. அப்படி அவங்களை கெட்டவங்களா ஆக்குறது அவங்களோட சூழ்நிலையாதான் இருக்கும். எல்லாமே நாம பாக்கிற விதத்தில்தான் இருக்கு. மேல மேல வெறுப்பை வளர்த்திட்டே போறதுனால உன்னோட நிம்மதிதான் போகும்..." எழுந்து அவன் தலையை தடவியவாரே,

"சில விஷயங்களை மறந்தால் மட்டும் தான் சந்தோஷமா\ வாழ முடியும் கண்ணா. அதுக்குத் தான் கடவுள் மறதின்னு ஒன்ன படைச்சிருக்கார்" என்றார்.

பிறகு அவன் முகத்தை நிமிர்த்தி, அவன் கண்களை கூர்ந்து கவனித்தவாரே

"அவளை உனக்கு பிடிச்சிருக்கா? என்று கேட்டார். அவன் பதில் சொல்லும் வரை அவர் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது.

"தெரியலமா.. அந்த மாதிரி எதுவும் இல்ல.. ஆனா அவள் என்னுடன், சம்பந்தப்பட்டவள், என்னோட பொறுப்புன்னு மனசு சொல்லிட்டே இருக்கு...அத ignore பண்ண முடியல.. ஒரு வேளை ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுருந்தேனோ என்னவோ..

ரெண்டு நாள் பார்க்காமல் இருந்தால் தன்னால மறந்து போயிரும்னு நினைக்கிறேன்..அப்படித்தான் இருக்கும்... எனக்கும் இந்த மாதிரி ஃபீல் பண்றது பிடிக்கவே இல்லை..உங்கிட்ட சொன்னதுக்கு அப்றம் தான் ஃப்ரீயா இருக்கு..” என்று கேள்வியும் நானே பதிலும் நானே என்பதுபோல், தன் பாரத்தை எல்லாம் தன் அம்மாவின் மேல் வைத்துவிட்டு, கூலாக

"வாம்மா.. இப்போதான் பசி தெரியுது.. உன் நளபாகத்தை ஒரு புடி புடிக்கலாம்.." என்று கிச்சனிற்குள் சென்றான்.

(ம்க்கும்.. இங்க எவ்வளோ பிரச்னை ஓடிட்டிருக்கு.. உனக்கு நளபாகம் கேட்குதா..)

அவன் பேசியதும் நளினி இன்னும் குழம்பிப்போனார்

'என்ன சொல்ல வர்றான்னே புரியலையே.. சரி எதுவா இருந்தாலும் அவனே சொல்லட்டும். மேல மேல கேட்டு அவன் ஆமான்னு சொல்லிடபோறான்.' என்று பயந்தவராய் அவனுக்கு பிடித்த ரவா இட்லி, சாம்பாரை தட்டில் வைத்துக் கொடுத்தார். அவர் ஏதோ யோசனையாய் இருப்பதைப் பார்த்து

"என்னம்மா.. ரொம்ப யோசிக்கற.." என்றான்.

"ஒன்னும் இல்லடா.. நாளைக்கு கோவிலுக்கு போகனும், அதான்.." என்றாள்.

"ம்ம்.. இப்பெல்லாம் தனியா தனியா போற,, என்ன விஷயம்?" என்று கிண்டலாக கேட்க

"ப்ச்ச்.. " என்று அலுத்துக் கொண்டார். அவரை யோசனையுடன் பார்த்துக் கொண்டே,

“ ஆமா உன் வீட்டுக்காரர் எங்க? ரெண்டு நாள்ளா பாக்கவே இல்ல...”

“இப்பயாவது கேட்டியே... அவர் டெல்லி கான்ஃபரன்ஸ்க்கு போயிருக்கார்...”

“அப்படியா... அப்போ நாளைக்கு நான் வேணா உன்ன கோவில்க்கு கூட்டிட்டு போகவா...?” என்று கேட்டவனை, வெற வினையே வேண்டாம் என்று மனதில் எண்ணியவராய்,

“கூட மூனு பொண்ணுங்க வருவாங்க பரவைல்லையா..?” என்று கேட்க,

“ஆள விடுங்க....” என்று கையை தூக்கி கும்பிடு போட்டான்.

றுநாள் காலை hostel-க்கு வந்தவர், நந்துவுடன் கூட ஆருவையும், அனுவையும் பார்த்து மிகவும் சந்தோஷமானார். அனைவருமே சற்று குழப்பமான மனநிலையில் இருந்ததால், எல்லோரும் சேர்ந்து கோவிலுக்கு போகலாம் என்று முடிவு செய்து, அதன்படி வடபழநி முருகனை வந்தடைந்தார்கள்.

ஒவ்வொருவரும் முரண்பாடாக வேண்டிக்கொண்டதால் முருகனே ஒரு நிமிடம் கிரீடத்தை கழட்டி கையில் வைத்துக்கொண்டு

"ஸ்..அப்பா.... இப்பவே கன்ணக் கட்டுதே.." என்று புலம்பிவிட்டார்.

பின்ன என்ன,

நளினி “ முருகா..எப்படியாவது நந்துவையும் சந்துருவையும் சேர்த்து வச்சிரு” என வேண்டிக் கொள்ள,

நந்துவோ “ இனி சந்துரு கண்ணிலே தான் படக்கூடாது...” எனக் கேட்க,

ஆரு “ முருகா அந்த சம்பவத்தை மறக்க வை...வாழ்னாள் முழுவதும் அவனைப் பார்க்கவே கூடாது..” என்று கேட்க,

அனுவோ “ ப்ளீஸ் செல்லம்...எப்படியாவது ஆருவோட மனச மாத்து. வின்சி நல்லவன்னு புரியவை...உன்னக்கு என் கையால நைவேத்தியம் பண்ணி கொண்டு வர்றேன்..” என்று ஐஸ் வைக்க,

 முருகா “ஐயையொ..உன் கையாலயா...!!!”என்று அலறினார்.

 பிறகு நால்வரும் அமர்ந்து கதை பேச ஆரம்பித்தனர். நளினி அனுவுக்கு சமமாக வாயடிக்க, அனுவே அசந்து

"தெய்வமே.. என்ன விட்டுறுங்க.. இனிமே நீங்க தான் என் குரு" என்று வணங்குவதுபோல் இடைவரை குனிய,

அவரும் "அப்படியே ஆகட்டும் மகளே.." என்று ஆசீர்வதிப்பதுபோல் கைகளை உயர்த்திக் காட்டினார்.

இப்படி சிரித்து பேசியது எல்லோருக்கும் ஒரு மாறுதலாக இருந்தது. நளினிக்கும் கூட மனம் கொஞ்சம் தெளிந்தது.

கூடிய சீக்கிரமே தன் மகனிடம் பக்குவமாக கூறிவிட வேண்டும். எப்படியும் நந்துதான் தன் மருமகள் என்று முடிவு செய்துகொண்டார். அதை பார்த்து முருகா "இந்த வேலையை நான் எப்பவோ ஆரம்பிச்சுட்டேன்.." என்று புன்னகைத்துக் கொண்டார். பிறகு இவர்களைக் கொண்டு வந்து hostel-லில் விட்டுவிட்டு அவர் வீட்டிற்கு சென்றார்.

திங்கள் காலை,

 காலேஜில் பைக்கை தன் இடத்தில் நிறுத்திவிட்டு இறங்கியவனுக்கு கொஞ்சம் பரபரப்பாக இருந்தது.

"சே.. இது இன்ன இம்சை" என்று அலுத்துக் கொண்டவன், இவ்வளவுதானா தன் மனவலிமை என்று தன்னைத்தானே கடிந்துக் கொண்டு, இயல்பை விட அதிகமான இறுக்ககத்துடன் தன் department-ஐ நோக்கி சென்றான்.

ஆனால் கண்கள் மட்டும் மூளை இட்ட கட்டளையை காற்றில் பறக்க விட்டுவிட்டு, அவளை தேடியது. First year கூட்டத்தில் அவள் இல்லாமல் போகவே, ஒரு பக்கம் நிம்மதியாகவும், மறுபக்கம் ஏமாற்றமாகவும் இருந்தது.

 விறுவிறுவென்று தன் ortho department-ஐ நோக்கி சென்றவன், அதற்கு முன் இருந்த perio department-யில் மூடியிருந்த கதவின் உள்ளே சத்தம் கேட்கவும், ஜன்னல் வழியே பார்த்தவன் முகம் கோபத்தில் சிவக்க, வேகமாக கதவை படாரென திறந்து உள்ளே சென்றான்.

அங்கு நந்து நனைந்த ஆடு போல் நடுங்கிக் கொண்டிருக்க, ஆணும் பெண்ணுமாய் நான்கு பேர் அவளை சுற்றி நின்றிருந்தனர். போன வேகத்தில் நந்துவை இழுத்து தன்னோடு சேர்த்து பிடித்தவன், எதிரில் நின்றவளை அறைவதர்க்காக கையை ஒங்கினான்...

 

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 05


Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 07

நினைவுகள் தொடரும்...

{kunena_discuss:677}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.