(Reading time: 9 - 17 minutes)
Malaiyil yaaro manathodu pesa...
Malaiyil yaaro manathodu pesa...

“வெண் பொங்கலா! எனக்கு ரொம்ப பிடிக்குமே, கொடு சரண்யா!”

   

சரண்யா அதை எதிர்பார்த்திருக்கவில்லை! ஆனாலும் மகிழ்ச்சியுடனே அவளுக்கென வைத்திருந்த பொங்கலை நளினிக்கு தட்டில் எடுத்துக் கொடுத்தாள்! கூடவே, காய்ச்சி வைத்திருந்த பாலை சிறு டம்ப்ளரில் கொடுத்தாள்!

   

“சாம்பார் செய்ய டைம் இல்லை மேடம்... சட்னி மட்டும் தான செய்தேன்...”

   

நளினி எந்த பந்தாவும் இல்லாமல் தரையில் அமர்ந்து சரண்யா கொடுத்த பொங்கல் - சட்னியை சுவைத்தாள்!

   

“எனக்கு பொங்கல் ரொம்ப பிடிக்கும் சரண்யா! சாப்பிட்டே ரொம்ப நாள் ஆச்சு! மைத்திக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது! அதனால் எங்க வீட்டு சமையல் அம்மா செய்றதில்லை! நானே செய்யலாம்னு சில சமயம் யோசிப்பேன், ஆனாலும் ட்ரை செஞ்சதில்லை! இவ்வளவு வருஷத்துல நான் சமைச்சதே கிடையாது, டேஸ்ட் செய்ய மட்டும் தான் தெரியும்!”

   

நளினி வெகு நாள் பழகியவளைப் போல வெகு இயல்பாக பேசவும், சரண்யாவின் மனதில் இருந்த தயக்கங்கள் மெல்ல கரைந்துப் போனது!

   

“எனக்கும் ரொம்ப எல்லாம் சமைக்க தெரியாது மேடம்! கல்யாணத்துக்கு அப்புறம் தேவைக்குன்னு கத்துக்கிட்டது தான்! உங்களுக்கு வேற என்ன எல்லாம் பிடிக்கும்னு சொல்லுங்க... நான் உங்களுக்கு செஞ்சு தரேன்...”

   

“கவலையே படாதே, பெரிய லிஸ்ட் கொடுக்குறேன்...”

   

“அதனால என்ன மேடம் செஞ்சுக் கொடுத்தா போச்சு...”

   

“தேங்க்ஸ் சரண்யா... என்னை இப்படி மேடம்ன்னு கூப்பிடாதே... எப்படியோ இருக்கு... நீ முன்னாடி இருந்த வீடு பக்கத்துல இருந்தவங்களை அக்கான்னு கூப்பிடுவன்னு மைத்தி சொன்னா... என்னை அக்கான்னு கூப்பிட சொல்ல ஆசையா தான் இருக்கு... ஆனா, எனக்கே அது 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.