“உனக்கு எப்போ என்ன மாதிரியான ஹெல்ப் வேணும்னாலும் என்னை கேட்கலாம்... இதெல்லாம் கேட்கலாமான்னு எல்லாம் யோசிக்கவே செய்யாதே...”
“சரி... ஆன்ட்டி... தேங்க்ஸ்...”
“நிஷா ஸ்கூல் அட்மிஷனுக்கு ஜெயந்த், என் மருமகன் ஃபோன் செய்திருக்கார்... எந்த ப்ராப்ளமும் இருக்காது... அவ ஸ்கூல் வேன்லேயே போயிட்டு வந்திரலாம்... ஈவ்னிங் ஸ்கூல்ல இருந்து எங்க வீட்டுக்கு வந்திரட்டும்... நீயும் சில சமயம் வேலைக்காக வேற இடத்துக்கு போக வேண்டி இருக்கும்னு மைத்தி சொன்னா...”
நளினி சொல்வதை எல்லாம் நம்ப முடியாமல் கேட்டுக் கொண்டிருந்த சரண்யா, அவள் பேச்சை நிறுத்தி பார்க்கவும், வேக வேகமாக ஆம் என்ற அர்த்தத்தில் தலை அசைத்தாள்!
“அப்போ, நீ ஈவ்னிங் வந்து சமைக்க ரொம்ப நேரமாகுமே சரண்யா... பேசாம எங்க வீட்டுலேயே நீயும் நிஷாவும் டின்னர் சாப்பிட்ருங்க...”
“இல்ல மேட... ஆன்ட்டி... அதெல்லாம் சரியா இருக்காது!”
“சரி தப்பு எல்லாம் நம்ம கைல தான் இருக்கு சரண்யா! நீ எனக்கு அப்பப்போ சமைச்சு தரேன்னு சொன்னது எல்லாம் சும்மா பொய்யா??? வீக் என்ட்ல நீ எனக்கு லஞ்ச் சமைச்சு கொடு... டின்னர் டெய்லி நீங்க எங்க வீட்டுல சாப்பிடுங்க...”
“அது...”
“எதுக்கு சரண்யா இவ்வளவு யோசிக்குற? முதல்ல இந்த வீக் வா... உனக்கு பிடிக்கலைனா அப்புறமா ப்ளான் மாத்திக்கலாம்...”
“அது...”
“நான் இவ்வளவு சொல்றேன்... என்ன நீ...”